Published:Updated:

தாஜ்மகாலை மூடச் சொன்னது முதல் பயோமெட்ரிக் சிஸ்டத்துக்கு தற்காலிகத் தடை வரை... கொரோனா அப்டேட்ஸ்!

கொரோனா தாக்கத்தின் தற்போதைய அப்டேட்கள்

சீனாவைத் தாக்கத் தொடங்கி இந்தியாவரை வந்துவிட்டது, கொரோனா! எல்லா நாடுகளிலும் நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் கையாளப்பட்டு வருகின்றன. கொரோனா தாக்கத்தின் தற்போதைய அப்டேட்கள் இங்கே...

2
கொரோனா மாஸ்க்

மாஸ்க் கட்டுப்பாடு!

மருந்தகங்களில் மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷனோடு வராதவர்களுக்கு `என்95' வகை மாஸ்குகளை விற்கத் தடை விதித்துள்ளது, மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்துத் துறை நிர்வாகம்.

3
Representational Image

மருத்துவர்களும் தனிமையில்...!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மருத்துவப் பணியாளர்களுக்கே கொரோனா குறித்த விழிப்புணர்வற்ற நிலைதான் நீடிக்கிறது. பல மருத்துவர்களும்கூட நோய் அச்சத்தால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

4
விமானம்

வெளிநாட்டவருக்குத் தடை!

தைவான் நாட்டைச் சேர்ந்த 6 பேரை, தங்கும் அறை தர மறுத்துத் திருப்பியனுப்பியது, உத்தரகாண்டின் ஒரு ஹோட்டல் நிர்வாகம். வெளிநாட்டவர்கள் பலர் இந்தியா வருவதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

5
Representation image

பயோமெட்ரிக் சிஸ்டம் நிறுத்தம்!

பல்வேறு அலுவலகங்களில் விரல்ரேகை பதிவுசெய்யப்படுகிற பயோமெட்ரிக் சிஸ்டம் வெள்ளிக்கிழமையிலிருந்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6
ராகுல்காந்தி

ராகுல்காந்திக்கு கொரோனா டெஸ்ட்!

இத்தாலிக்குச் சுற்றுப்பயணம் போய்வந்த ராகுல்காந்திக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் நோய்க்கான எந்த அறிகுறியும் ராகுலுக்கு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்தது, காங்கிரஸ்.

7
தாஜ்மஹால்

`தாஜ்மஹாலை மூட வேண்டும்!'

கொரோனா பரவிவருவதால் சுற்றுலாப் பயணிகளைத் தவிர்க்க, தாஜ்மஹாலை சிலநாள்களுக்கு மூட வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார், ஆக்ரா நகர மேயர்.

8
பொருளாதார இழப்பு

உலகப் பொருளாதார இழப்பு!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 77 முதல் 347 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பும், உலகளவில் உள்ளூர் உற்பத்தி விகிதத்தில் 0.4 சதவிகித அளவுக்கு வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக ஆசிய வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த இழப்பு விகிதத்தில் மூன்றில் 2 பங்கு, சீனாவில் ஏற்பட்டுள்ளது.

9
IIFA விருதுகள்

விழா, போட்டி ஒத்திவைப்பு!

ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சர்வதேசத் திரைத்துறை விருதுகள் விழா, டெல்லியில் நடைபெறவிருந்த சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பைப் போட்டி ஆகியவை கொரோனா அச்சத்தால் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

10
கொரோனா வைரஸ்

லட்சத்தைத் தாண்டும் பாதிப்பு!

நெதர்லாந்தில்தான் முதல் கொரோனா மரணம் ஏற்பட்டது. தற்போதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி உலகம் முழுவதும் 1,02,188 பேரை கொரோனா பாதித்திருக்கிறது. நோயின் தீவிரத்தால் பலியானோர் எண்ணிக்கை மட்டுமே 3,491.

11
கொரோனா வைரஸ் ( Pixabay )

புதிதாக பாதித்துள்ள நாடுகள்...!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை பாதித்து வருகிற கொரோனா புதியதாக பெரு, ஸ்லோவாக்கியா, செர்பியா, கேமரூன், டோகோ, பூடான், வாடிகன் போன்ற நாடுகளையும் தற்போது தொற்றியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு