சிறுநீர்ப்பாதைத் தொற்று (Urinary Tract Infection)
பெண்களை பாதிக்கும் தொற்றுகளில் மிகவும் பொது வானது சிறுநீர்ப் பாதைத் தொற்று. பெண்களில் 50-60 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஒரு மில்லி சிறுநீரில் ஒரு லட்சத்துக்கும் மேலாக, குறிப்பிட்ட பாக்டீரியா காணப்பட்டால் அதை சிறுநீர்ப்பாதைத் தொற்று என்று மருத்து வர்கள் உறுதிசெய்வார்கள்.
சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் என சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியில் தொற்று ஏற்பட்டாலும் அது சிறுநீர்ப்பாதைத் தொற்றுதான். ஒவ்வொரு பகுதியில் ஏற்படும் தொற்றுக்கும் வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும், அனைத்தும் சிறுநீர்ப்பாதைத் தொற்று என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
பெண்களுக்கு அதிகம்
சிறுநீர்க்குழாய் சிறியது என்பதாலும், சிறுநீர் வெளியேறும் இடம், வெஜைனா, ஆசனவாய் மூன்றும் அருகருகில் இருப்ப தாலும் ஆண்களைவிட பெண்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொதுக் கழிப்பறைகளை அதிகம் பயன்படுத்துவதாலும், மெனோபாஸ் நிலையை அடைந்தவர்களுக்கு ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன் சுரப்பு குறைவதும் இந்தப் பிரச்னையை உருவாக்கலாம்.
பிற காரணங்கள்
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது
நீரிழிவு
ஸ்டீராய்டு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள்
ஏற்கெனவே இதே தொற்று ஏற்பட்டவர்கள்
தொற்று ஏற்பட்டு முழுமையான மற்றும் முறையான சிகிச்சை எடுக்காதவர்கள்
சிறுநீரகக் கல் பாதிப்பு
சிறுநீர் வெளியேறுவதற்கு நீண்ட நாள்கள் கத்தீட்டர் பொருத்திக்கொண்டவர்கள்
பிறவியிலேயே சிறுநீர் மண்டலத்தில் பிரச்னை இருப்பது.

சுயபரிசோதனை
பொதுவாக எந்த வகை தொற்றாக இருந்தாலும் அதை மருத்துவப் பரிசோதனை யில்தான் உறுதி செய்ய முடியும். இருப்பினும் கீழே குறிப்பிட்டுள்ள எட்டு கேள்விகளில் ஒன்று அல்லது அதற்கு மேலானவற்றுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்பதாக இருந்தால் அது சிறுநீர்ப்பாதைத் தொற்றாக இருக்கலாம்.
1. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுகிறதா?
2. அடிவயிற்றில் வலி உள்ளதா?
3. குளிருடன் காய்ச்சல் அடிக்கிறதா?
4. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா?
5. சிறுநீர் கழித்த பின்னரும் முழுமையாக வெளியேறாதது போன்ற உணர்வு உள்ளதா?
6. சீராகப் பிரியாமல் சிறுநீர் விட்டுவிட்டு வருகிறதா?
7. வெள்ளையாக இல்லாமல் சிறுநீரின் நிறம் கலங்கியதுபோல இருக்கிறதா?
8. சீழுடன் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா? (இந்த அறிகுறி சிறுநீர் வெளியேறும் இடத்தில் ஏற்பட்டிருக் கிறதா அல்லது வெஜைனாவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெஜைனாவில் ஏற்பட்டால் அது அந்தப் பகுதியைச் சார்ந்த தொற்றாக இருக்கலாம்.)
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஓரிரு நாள் களுக்கு மேல் நீடித்தால் அது சிறுநீர்ப்பாதைத் தொற்றாக இருக்கலாம்.
தகவல்: அனு ரமேஷ், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்
அலட்சியம் ஆபத்து!
அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் தொற்று தீவிரமாகி பல உறுப்புகளை பாதிக்கும் பிரச்னையாக உருவெடுக்கும். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதி, தீவிர சிகிச்சை, வென்டிலேட்டர் சிகிச்சை வரை தேவைப்படலாம். சிறுநீரில் காணப் படும் பாக்டீரியா, ரத்தத்துக்குள் கலந்து விட்டால் ரத்தத்தில் நச்சேற்றம் ஏற்பட்டு உயிரிழப்புகூட ஏற்படலாம். ஆரம்ப நிலை யிலேயே மருத்துவரை அணுகிவிட்டால் வெறும் மருந்துகளிலேயே சரி செய்துவிடலாம்.