Published:Updated:

மருத்துவர்கள் அலட்சியம்... பச்சிளம் குழந்தையின் உடலில் இருந்து 20 நாள்களாக அகற்றப்படாத ஊசி

குருபிரசாத்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், பிறந்த குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூச, 20 நாள்களாக அகற்றப்படாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊசி
ஊசி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரம் பகுதியைச் சேர்ந்தவர், பிராபகரன். அவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு ஏற்கெனவே ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை
குழந்தை

21-ம் தேதி அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. 31-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினர். இந்நிலையில், குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசியை அகற்றாமலேயே விட்டுவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தாய் மலர்விழி, “குழந்தையின் இடது கை மற்றும் இடது தொடையில் தலா ஒரு ஊசி போட்டனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்றைய தினம் இரவு குழந்தை அழுதுகொண்டே இருந்தது. மறுநாள் குழந்தையின் தொடையில் வீக்கம் ஏற்பட்டது. நாளடைவில் வீக்கம் பெரிதாகிக்கொண்டே இருந்தது.

வீக்கம்
வீக்கம்
50 நாள்களில் 32 குழந்தைகள் மரணம்! - சர்ச்சையில் உ.பி அரசு மருத்துவமனை

இதனிடையே, குழந்தையை என் தாய் குளிப்பாட்டும்போது, தொடையில் ஏதோ பட்டு, தாயின் கையில் ரத்தம் வந்தது. ஊசி போட்ட இடத்தில் பார்த்தபோது, ஊசியின் மேல் நுனி தெரிந்தது. அது, செவிலியர் போட்ட ஊசிதான். உடனடியாக அதை வெளியில் எடுத்துவிட்டோம்.

மருத்துவர் மற்றும் செவிலியரின் கவனக்குறைவே இதற்குக் காரணம். அலட்சியமாக இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஊசி
ஊசி

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி, எம்.எல்.ஏ, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆகியோருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.