பிரீமியம் ஸ்டோரி

துரையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ‘வைகை அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் அண்ட் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ்.’ காலத்துக்கேற்ப மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இன்று பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. தவிட்டு எண்ணெய் (Rice Bran Oil) உற்பத்தியில் தனியிடத்தைப் பெற்று ஏற்றுமதிக்கான தேசிய விருதை 12 ஆண்டுகளாகவும், பொட்டாசியம் குளோரைடு ஏற்றுமதிக்கான தேசிய விருதை ஆறு ஆண்டுகளாகவும் பெற்றுவருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் நீதிமோகன். இளம் தொழில்முனைவோர்களுக்கு உதவும் ‘யெஸ்’ (Young Entrepreneur School) என்ற அமைப்பின் தலைவர். அவரின் கச்சிதமான உடல்வாகு நம்மை வியக்கவைப்பது. தன் ஃபிட்னெஸுக்குக் கடைப்பிடிப்பவற்றை அவர் விளக்குகிறார் இங்கே...

கோபத்தைக் குறைக்கும் யோகா!

பின்தூங்கி முன்னெழுவது!

புத்தகங்கள் வாசிப்பதால், உறங்குவதற்கு இரவு 11 மணிக்குமேல் ஆனாலும், காலையில் 5 மணிக்கு எழுந்துவிடுவேன். சிறிது நேரம் வாக்கிங். சிறிது நேரம் தியானம். யோகாவை பிரம்மகுமாரி அமைப்பிலும், பிராணாயாமத்தை ஈஷாவிலும் கற்றுக்கொண்டேன். அந்தப் பயிற்சிகள்தான் தினமும் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

உடற்பயிற்சி

யோகா, தியானத்துக்குப் பிறகு கருப்பாயூரணி அருகில் நாங்கள் அமைத்திருக்கும் ஷட்டில்காக் கிளப்புக்குச் சென்று இரண்டு மணி நேரம் வியர்க்க வியர்க்க விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அங்கு சென்றாலே எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். அந்த மகிழ்ச்சியிலேயே என் உடலும் மனமும் சார்ஜ் ஏற்றிக்கொண்டுவிடும்.

கோபமும் மன அழுத்தமும் அனைவருக்கும் பொதுவானவை. நான் அதற்கான வாய்ப்புகளை வளரவிடுவதில்லை.

உணவுப் பழக்கம்!

காய்கறிகள், பழங்களுடன் கார்போஹைட்ரேட் இல்லாத சிற்றுண்டி, மதிய உணவு சாப்பிடுவேன். அதற்காக உணவில் பெரிய கட்டுப்பாடெல்லாம் இல்லை.

நீதிமோகன்
நீதிமோகன்

தொழிலில் டென்ஷன் கூடவே கூடாது!

ஆரம்பகாலத்தில் அனைத்து வேலைகளையும் நானே பார்த்தேன். நிறுவனம் விரிவடைந்த பிறகு நிறைய திறமைசாலிகள் எனக்குக் கிடைத்தார்கள். ‘நம்மிடம் வேலை செய்பவர்கள் நன்றாகச் செய்வார்கள்; நாம் நல்லவற்றை மட்டும் செய்வோம்’ என்பது எனக்குப் பிடித்த பிசினஸ் ஸ்லோகன்.

நீதிமோகன்
நீதிமோகன்

மன திருப்தி!

தென் மாவட்டங்களில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தொழில்முனைவோராக்கச் செயல்படும் ‘யெஸ்’ அமைப்பின் தலைவராக இருப்பது எனக்குப் பிடித்த பொறுப்பு. ‘யெஸ்’ அமைப்பை நாட்டின் சிறந்த இளம் தொழிலதிபர்களுக்கான மேலாண்மைப் பள்ளியாகக் கொண்டுவர வேண்டும் என்பது என் இலக்கு.

மன அழுத்தம், கோபம்... கன்ட்ரோல்!

கோபமும் மன அழுத்தமும் அனைவருக்கும் பொதுவானவை. நான் அதற்கான வாய்ப்புகளை வளரவிடுவதில்லை. காரணம், அப்டேட்தான். எங்கள் நிறுவனத்தைக் காலத்துக்கு ஏற்றாற்போல் அப்டேட் செய்து வருவதால் தேவையற்ற டென்ஷன், ஸ்ட்ரெஸ் ஏற்படுவதில்லை.

ஞாயிறு அன்று குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பேன். திரைப்படம், அவுட்டிங் எல்லாம் எப்போதாவதுதான். நேரம் கிடைக்கும்போது கோயிலுக்குச் செல்வேன். என் மனைவி ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

சுற்றுலா!

தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். அது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். நீளும் வானம், நிழல் தரும் மரங்கள், எதிர்த்து வரும் காற்று... இவற்றை எல்லாம் ரசித்தபடி செல்லும் சின்ன சின்னப் பயணங்கள்கூட நம்மை செம்மைப்படுத்தும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு