Published:Updated:

`சைவ உணவு உண்பவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லை?!’ - போலி ஃபார்வேர்டும் விளக்கமும் #Corona #FactCheck

Food
Food

'வைரஸ் உடலில் தங்குவதற்கு விலங்கின் புரதம் மிக முக்கியக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது' என்பதில் ஆரம்பித்து, இந்தப் போலிச் செய்தியில் பல போலிச் சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த அதே நேரத்தில், அதைப் பற்றிய போலிச் செய்திகளும் காட்டுத்தீபோல பரவத் தொடங்கின. உண்மைச் செய்தியைவிட போலிச் செய்திகள் அதிக வேகமாகப் பரவுகிரது. காரணம், போலிச் செய்திகளின் சுவாரஸ்யத்தன்மையே.

Corona
Corona

கொரோனா தொடர்பான போலி ஃபார்வேர்டுகளைக் கட்டுப்படுத்த, சமூக ஊடகங்கள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்போதும் இவற்றின் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில், 'சைவ உணவு உட்கொள்பவர்கள் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை' என்ற செய்தி பரவி வருகிறது.

'வைரஸ் உடலில் தங்குவதற்கு விலங்கின் புரதம் மிக முக்கியக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது' என்பதில் ஆரம்பித்து, இந்தப் போலிச் செய்தியில் பல போலிச் சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

food
food

சீனாவின் உலக சுகாதாரப் பிரதிநிதி காவ்டன் காளே, சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடல் உணவுச் சந்தை மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில், மாமிச உணவுகளைத் தவிர்க்கும்படிக் கூறியிருந்ததை, இந்தப் போலி ஃபார்வேர்டில் திரித்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டையில் அதிகரித்த `எலி மருந்து’ மரணங்கள்! -காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மளிகைக் கடைகள்

இந்தியில் இருக்கும் இந்தச் செய்தி குறித்து ஆராய்ந்தோம்.

இந்தச் செய்தி குறித்த எந்த விவரமும் கூகுள் தேடலில் இல்லை. 'ஆல்ட்நியூஸி'ன் ஃபேக்ட் செக்கில், 'இதுபோன்ற எந்த ஒரு கருத்தையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிடவில்லை' என்று குறிப்பிட்டுள்ளது.

WHO
WHO

உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி சுப்ரியா பேஷ்பாருஹேவும், இந்தச் செய்தியை மறுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில், கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை மாமிச உணவுகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு