Published:Updated:

இந்தியாவில் கோவிட்-19 மருந்துக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் ஆராய்ச்சிகள் என்னென்ன? - நிபுணரின் பதில் #DoubtOfCommonMan

கோவிட் 19
கோவிட் 19

வைரஸுக்கு உயிரில்லாத காரணத்தால் அதை நம்மால் எளிதில் அழிக்க முடியாது. பொதுவாக, வைரஸுக்கு அதன் ஓம்புயிரியினுள்(host) வந்த பிறகுதான் உயிர் வரும்.

கொரோனா போன்ற தொற்றுநோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் இந்தியாவில் நடக்கின்றனவா? இந்த ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? இதுவரை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மருந்துகள் என்னென்ன?' என்று விகடனின் டவுட் ஆஃப் காமன்மேன் பக்கத்தில் வாசகர் ராதாகிருஷ்ணன் கேட்டிருந்தார்.

corona
corona

ராதாகிருஷ்ணனின் கேள்விக்கு விடை அளிக்கிறார், மத்திய அரசின் விக்யான் பிரசார் நிறுவனத்தில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த வி வெங்கடேஸ்வரன். ``கொரோனா போன்ற வைரஸ் நோய்களுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது சிக்கலான விஷயம். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களுக்கு நம்மால் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்த முடியும். ஆனால், வைரஸ்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அதனால் ஏற்படக்கூடிய மருத்துவ நன்மைகளைவிட தீமைகள் அதிகமாக இருக்கும்.

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

வைரஸுக்கு உயிரில்லாத காரணத்தால் அதை நம்மால் எளிதில் அழிக்க முடியாது. பொதுவாக, வைரஸுக்கு அதன் ஓம்புயிரியினுள்(host) வந்த பிறகுதான் உயிர் வரும். நாவல் கொரோனா வைரஸைப் பொறுத்தவரை மனிதன்தான் அதன் ஓம்புயிரி. ஓம்புயிரிக்கு வெளியில் சிறிது நேரம் மட்டுமே வைரஸால் உயிர்ப்புடன் இருக்க முடியும். அதன் பிறகு அது தானாகவே சிதைந்துவிடும். இதனால் வைரஸால் ஏற்படும் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் எல்லாமே வைரஸின் விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே பெரும்பாலும் இருக்கும்.

த வி வெங்கடேஸ்வரன்
த வி வெங்கடேஸ்வரன்

முதன்முதலில் வைரஸ் நம் உடம்புக்குள் வரும்போது, அது நண்பனா எதிரியா என்று தெரியாமல் நம் உடல் குழம்பி நிற்கும். அந்த நேரத்தில்தான் வைரஸ் நம் உடம்பில் வீரியம் அடையத் தொடங்கும். பிளாஸ்மா தெரபியில், வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவருக்கு உருவான ஆன்டிபாடி எனப்படும் எதிர்பொருள்களை எடுத்து, மற்றொரு மனிதருக்குப் பொருத்துகிறோம்.

இதனால் வைரஸ் உள்நுழையும்போது நம் உடல் குழம்பி நிற்காமல், உடனடியாக எதிர்வினை ஆற்றத் தொடங்கும். இதையடுத்து, கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்பொருள்களை செயற்கையாக உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. கோவிட்-19 புது வைரஸ் என்பதால் இதனுடைய எதிர்பொருள்கள் நம்மிடம் இல்லை.

Corona
Corona

இதோடு இரண்டாவதாக, ஏற்கெனவே ஏற்பட்ட வைரஸ் தொற்றுகளின்போது அவற்றுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைக் கொரோனா வைரஸுக்குப் பயன்படுத்தலாமா என்ற ஆராய்ச்சியும் செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக, க்யூபா மருந்து என அழைக்கப்படும் இன்டர்ஃபெரான்(interferon), செல்களுக்கு அபயம் ஏற்படும் தகவலை அளிக்கும் மூலக்கூறு. இது செல்களுக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரியப்படுத்தப் பயன்படும் மருந்து. ஆபத்தை உணரவைக்கக் கூடிய இந்த மூலக்கூறுகளை ஏற்கெனவே செயற்கையாக உற்பத்தி செய்துவிட்டார்கள். இதைச் செலுத்தி கொரோனா தொற்று அதிகளவில் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மோதிய இருசக்கர வாகனங்கள் -பெரம்பலூர் பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு; சிவகங்கையில் சோகம்
 test
test

இவற்றுடன், இந்தியாவில் மூன்றுவிதமான தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன. முதலாவதாக, கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்து அதை நமது உடலில் புகுத்தினால், அது நமது உடலில் நோய் எதிர்ப்புப் பொருள்களைத் தயாரித்து வைக்கும். பின்னர், கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனடியாக நமது உடல் எதிர்வினையாற்றும்.

இந்த ஆராய்ச்சி ஹைதராபாத்தில் உள்ள சிசிஎம்பி-யில்(Center for Cellular and Molecular Biology) நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆராய்ச்சியில் உள்ள சவாலே, எதன் மீது வைரஸ் கிருமியை அதிகளவில் வளர்ப்பது என்பதுதான். வயலில் நெல் விளைவித்தால்தான் நமக்கு வேண்டிய அரிசி கிடைக்கும். எங்காவது வைரஸ் கிருமியை செயற்கையாக வளர்க்க முடிந்தால்தான் இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்க முடியும்.

 Test
Test

நம் உடம்பில் நுழையும் வைரஸ் அதன் ஜெனிடிக் மெட்டீரியல்களைப் பயன்படுத்தி நம் செல்களின் மூலம் அதற்குத் தேவையான புரதத்தைத் தயார்படுத்திக்கொள்ளும். வேறு ஒரு முயற்சியாக வைரஸின் ஜெனிடிக் பொருள்களிலிருந்து, நமக்கு ஆபத்து விளைவிக்காத இரண்டு புரதங்களைப் பிரித்துவிடுகிறோம். அதை மீண்டும் நமக்கு ஆபத்து விளைவிக்காத வைரஸில் செலுத்தி விடுகிறோம். இதன் பிறகு அந்த வைரஸை நமது உடலில் செலுத்தினால் அது கொரோனா வைரஸின் இரண்டு, மூன்று புரதத்தை உற்பத்திசெய்யும். இதைப் பார்த்தவுடன் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு எதிரான கருவிகளைத் தயாரித்துவிடும்.

இந்த ஆராய்ச்சி முறையை புனேவில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிறுவனம் செய்து வருகிறது. இந்தத் தடுப்பூசிக்கான பாதுகாப்பு ஒப்புதல் கிடைத்துவிட்டால் அதற்கான காப்புரிமையை வாங்கமாட்டோம் என இவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியை யார் வேண்டுமானாலும் உற்பத்திசெய்து கொள்ளலாம்.

 Test
Test

மூன்றாவது ஆராய்ச்சியாக, கொரோனா வைரஸின் ஏதாவது ஒரு பகுதியை செயற்கையாக உற்பத்தி செய்து அதை உடலில் புகுத்தலாம். இதன் மூலமும் நோய்த் தடுப்பு மண்டலம் நோய்க்கு எதிரான எதிர்ப்பொருள்களைத் தயாரித்து விடும். தடுப்பூசியின் முக்கியக் குறிக்கோள், நோய் எற்படுத்துவதற்கு முன்னரே நோய்த்தடுப்பு ஆற்றலைத் தயாராக வைப்பதே.

கொரோனா கேள்விக்குட்படுத்திய அரசின் கொள்கை நிலைப்பாடுகள்... இனியாவது விழிப்போமா?

தடுப்பூசியைப் பொறுத்தவரை மூன்றாம் உலக நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய தடுப்பூசிப் பட்டியலில் 70% இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது. இது, கடந்த 60 ஆண்டுகளில் நாம் அறிவியல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளதன் பலன். இந்தியாவில் ரேபிஸ் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளையும் இந்தியாவே தயாரிக்கிறது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது" என்றார்.

Corona test
Corona test

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஆராய்ச்சிக்கான நிதி என்பது குறைந்த அளவிலேயே ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவிகிதமாகவே உள்ளது. இது சீனாவின் உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவிகிதமாகவும், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

Doubt of a common man
Doubt of a common man

நீண்டகால தொலைநோக்குப் பார்வையில் செயல்படாமல் உடனடியாக முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்ற நிலைக்கு ஆராய்ச்சியாளர்கள் தள்ளப்படுகிறார்கள். அறிவியல் என்பது எப்போதும் எதிர்காலத்துக்குத் தயாராவதுதான். தற்போது நாம் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு அன்று நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளே காரணம்.

test
test

எனவே, நாம் எதிர்காலத்துக்கென்று பிரத்யேகமாக முதலீடு செய்யவேண்டியது அவசியம், கட்டாயம். இப்போது நோய், தடுப்பூசிகள் போன்றவற்றுக்கான ஆராய்ச்சியை நாமே செய்வதால் அடுத்த நாட்டை நம்பியிருக்கத் தேவையில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் கட்டமைப்புகள் சரியில்லாமல் நம்மால் தடுப்பு மருந்துகளை தயார்செய்ய முடியவில்லை எனில், மற்ற நாடுகளிடம் கையேந்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

Fund amount source : natureasia.com

அடுத்த கட்டுரைக்கு