Published:Updated:

மோடி இன்று அறிமுகம் செய்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி; இதைப் பயன்படுத்துவது எப்படி?

இந்த ஹெல்த் ஐடி, ஒருவரின் மருத்துவப் பதிவுகள் அனைத்தையும் நீண்ட காலத்திற்குப் பேண உதவும். மேலும், எளிதாக மருத்துவ விவரங்களை பகிரவும் செய்யலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (The Ayushman Bharat Digital Mission) என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம், நாட்டு மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் ஹெல்த் ஐடி வழங்கப்படும். ஆதார் போன்ற ஒரு பிரத்யேக எண் அதில் இருக்கும். ஒரு நபரின் மருத்துவ வரலாற்றை முழுவதுமாக அதில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனால் மருத்துவமனைக்குச் செல்பவர்கள் மருத்துவ சான்றிதழ்கள், பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர் கணினி மூலம் நோயாளியின் ஹெல்த் ஐடியைப் பயன்படுத்தி அவரது மருத்துவ வரலாற்றை முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர், ``கடந்த ஏழு ஆண்டுகளாக சுகாதார அமைப்பை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

Ayushman Bharat Digital Mission
Ayushman Bharat Digital Mission
Twitter Photo:// @_DigitalIndia
மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் போதை மருந்துகள்; அதிர்ச்சி யதார்த்தம்! - நான் அடிமை இல்லை - 10

ஹெல்த் ஐடி!

ஹெல்த் ஐடி என்பது 14 இலக்க எண். ஒருவர் தனது ஆதார் மற்றும் மொபைல் எண் உதவியுடன் https://nha.gov.in/NDHM என்ற இணையதளத்தில் பதிவு செய்து தனக்கான ஹெல்த் ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான வழிகாட்டல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அந்த இணையதளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்த் ஐடி, ஒருவரின் மருத்துவப் பதிவுகள் அனைத்தையும் நீண்ட காலத்திற்குப் பேண உதவும். மேலும், எளிதாக மருத்துவ விவரங்களை பகிரவும் செய்யலாம்.

இதனை மின்னணு மருத்துவப் பதிவு எனலாம். பொதுவாக மருத்துவ விவரங்கள் நோயாளிகள் சிகிச்சை பெறும் தனித்தனி மருத்துவமனைகளுக்கேற்ப தனித்தனி கோப்புகளில் பராமரிக்கப்படும். இதை வைத்துப் பராமரிப்பது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். மேலும், அவை தொலைந்து போவதற்கும் வாய்ப்புகள் உண்டாகலாம். இந்நிலையில், நோயாளர்கள், குறிப்பாக நீண்ட கால நோய்வாய்ப்பட்டவர்கள், டிஜிட்டல் ஹெல்த் ஐடி மூலம் பெரிதும் பயன் பெறுவர்.

Ayushman Bharat Digital Mission
Ayushman Bharat Digital Mission
Twitter Photo:// @AyushmanNHA
Covid Questions: கொரோனாவிலிருந்து குணமானவர்களை பாதிக்கும் `பிரெயின் ஃபாக்'; என்ன தீர்வு?

ஒரு நபருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகள், முடிவுகள், அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் போன்ற அனைத்து தகவல்களும் ஆன்லைனில் கிடைப்பதனால், எதிர்காலத்தில் வெவ்வேறு பிரச்னைகளுக்காக வெவ்வேறு மருத்துவர்களை அணுகும் போது, இந்த விவரங்கள் அந்த மருத்துவர்களுக்குக் கிடைக்கப்பெற்று குழப்பமில்லாமல் சிகிச்சை பெற முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு