Published:Updated:

உப்பு நீரில் கோவிட் பரிசோதனை, 3 மணி நேரத்தில் முடிவு; புதிய பரிசோதனை விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Saline Water (Representational Image)
Saline Water (Representational Image) ( Image by Kawita Chitprathak from Pixabay )

``பரிசோதனை முடிவுகளும் 3 மணி நேரத்தில் கிடைத்துவிடும். இதன் விலையும் மிகக் குறைவு, மற்றும் அதிக உள்கட்டமைப்பு வசதிகளும் வேண்டியதில்லை. கழிவுகளும் குறைவு என்பதால் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உப்பு நீரில் வாய்கொப்பளித்து அதன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் உப்பு நீர் கொப்பளிப்பு ஆர்டி - பிசிஆர் கருவியைக் கடந்த மே மாதம் நாக்பூரைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (NEERI) கண்டுபிடித்தது. இதை இந்திய மருத்துவ ஆராய்சிக் கவுன்சில் (ICMR) அங்கீகரித்தது.

இந்நிலையில் இந்த பரிசோதனைக் கருவியை விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, இக்கருவியை உருவாக்கும் தொழில்நுட்பம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் நிதின் கட்காரி, ``இந்த பரிசோதனை முறையின் மூலம் எளிதாகவும் விரைவாகவும் முடிவுகளைப் பெற முடியும் என்பதால், உள்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் இதனைப் பயன்படுத்தலாம். விரைவான மருத்துவ சேவைகளை வழங்குவதன் மூலம் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வலுவாகச் செயல்பட முடியும்." என்று கூறினார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
கொரோனா இறப்புச் சான்றிதழ் பெற இனி புதிய நிபந்தனைகள்; வெளியிட்ட மத்திய அரசு!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில், இந்தப் பரிசோதனைக் கருவியை உருவாக்கும் நெறிமுறையை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையிடம் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (NEERI) அளித்துள்ளது. இதன் மூலம், இந்த கருவிகள் வடிவமைக்கப்பட்டு, தனியார் மற்றும் அரசு துறைகள் அனைத்திற்கும் விற்பனைக்கான உரிமம் வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், `சாதாரண பரிசோதனை முறையில் சளி மாதிரி சேகரிப்பதால், அதனை ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்துச் செல்ல நேர இழப்பு, மற்றும் பரிசோதனை செய்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது. ஆனால் உப்பு நீர் மூலம் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையில் பரிசோதனை செய்பவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் இல்லை; பரிசோதனை முடிவுகளும் 3 மணி நேரத்தில் கிடைத்துவிடும். இதன் விலையும் மிகக் குறைவு, மற்றும் அதிக உள்கட்டமைப்பு வசதிகளும் வேண்டியதில்லை. கழிவுகளும் குறைவு என்பதால் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு'' எனத் தெரிவித்துள்ளது.

Corona test (Represenational Image)
Corona test (Represenational Image)
`கோவிட் தொற்று ஏற்பட்டவர்கள் கோவாக்சின் 2-வது டோஸை தள்ளிப்போடலாம்!' - ICMR கூறுவது என்ன

உப்பு நீரால் வாய் கொப்பளிப்பதை சலைன் கார்கில் (Saline Gargle) என்கின்றனர். இந்த பரிசோதனை முறையில் உப்பு மற்றும் நீர் கரைசல் வழங்கப்படும். அதைக் கொண்டு வாய் கொப்பளித்து, ஒரு குழாயில் துப்ப வேண்டும். குழாய் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குறிப்பிட்ட கரைசலில் கலக்கப்பட்டு 30 நிமிடங்கள் அறை வெப்பநிலையில் வைக்கப்படும். பின்னர் ஆறு நிமிடங்கள் 98 டிகிரி வெப்பநிலையில் வைக்கப்பட்டு ஆர்என்ஏ பிரித்தெடுக்கப்படும். கிடைக்கப் பெற்ற ஆர்என்ஏ, ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு