Published:Updated:

`மக்கள் முடக்கப்படுவதால் நோயைக் கட்டுப்படுத்த முடியுமா?!’ -கொரோனா பரவலுக்கு WHO விளக்கம்

மைக்
மைக்

உலக நாடுகள் முடக்கப்படுவதில் உள்ள சிக்கல் ஒன்றே ஒன்று தான். பொது சுகாதார நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளவில்லையெனில் திரும்பவும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் போது வைரஸ் பரவும் அபாயம் ஏற்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் ஏற்பட்ட இந்த வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 3,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

ஐரோப்பாவில்தான் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இத்தாலியில் மட்டும் இதுவரை 5000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் பிரான்ஸ், ஸ்பெயினிலும் தாக்கம் பலமாக இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான ஈரானில் 1,685 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர். இந்தத் தொற்று நோய் காரணமாக 35 நாடுகள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளும் மற்ற நாடுகளுடனான தங்களது விமானப் போக்குவரத்தைத் துண்டித்து விட்டன.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால நிபுணர் மைக் ரியான பி.பி.சி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், `` உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்படுவதால் மட்டுமே இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்திவிட முடியாது. சிறிது காலத்துக்குப் பிறகு வைரஸ் திரும்பவும் பரவாமல் இருக்க பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். நாம் தற்போது கவனமாகச் செய்ய வேண்டியது வைரஸால் பாதிக்கப்பட்டோரையும் அவர்கள் சந்தித்த நபர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்துதலே ஆகும்.

உலக நாடுகள் முடக்கப்படுவதில் உள்ள சிக்கல் ஒன்றே ஒன்றுதான். பொது சுகாதார நடவடிக்கைகளைச் சரிவர மேற்கொள்ளவில்லை எனில் திரும்பவும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் போது வைரஸ் பரவும் அபாயம் ஏற்படும்" என்றார்.

மைக்
மைக்

இந்தியாவில் மார்ச் 22-ம் தேதி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்விதமாக நாடெங்கும் மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே சமயத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கினர். உலக நாடுகளின் தலைவர்கள், மக்கள் என அனைவரும் இந்தத் தொற்று நோய்க்கு எதிராக ஒன்றிணைந்து போராடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அதிர்ச்சி’ அமெரிக்கா.. `லாக்-டவுன்’ ஈரோடு.. காரணம்..?' -கொரோனா அப்டேட்ஸ்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தத் தொற்று நோய்க்கான மருந்தை அமெரிக்கா நிச்சயம் கூடிய விரைவில் கண்டுபிடித்து விடும் எனக் கூறி வருகிறார்.

``தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தால் மட்டுமே இந்தத் தொற்று நோயிலிருந்து விடுபட முடியும். மேலும் மக்கள் கடைகளிலிருந்து தேவையான பொருள்களை மட்டுமே வாங்கி வைக்க வேண்டும். இதனால் இக்கட்டான காலகட்டத்தில் பொருள்கள் இல்லாதவர்களும் பயனடைவர். மக்கள் முடிந்த வரையில் பொது வெளியில் சமூகமாகக் கூடுவதை தவிர்த்தால் வைரஸிற்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வென்று விடலாம்" என்கின்றனர் அரசுத்துறை அதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு