கோவிட் நோய்த்தொற்று குறையத் தொடங்கியதும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிகளில் குழந்தைகள் மாஸ்க் பயன்படுத்து வதற்கான புதிய பரிந்துரைகளை உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யுனிசெஃப் (UNICEF) வழங்கியுள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதில், கோவிட் தொற்று பரவும் பகுதிகளில் இருக்கும், 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் முகத்தில் நன்கு பொருந்தும்படியான மாஸ்க் அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள், பள்ளிகளில் குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி விட்டு இருந்தாலும், காற்றோட்டம் குறைவாக உள்ள உள் அறைகளில், மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். பள்ளி அறைகளில் குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி விட முடியாத பட்சத்தில், போதுமான காற்றோட்ட வசதியாவது இருக்க வேண்டும்.
12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இளம் பருவத்தினர் பெரியவர்களைப் போலவே மாஸ்க் பயன்படுத்தலாம். ஏற்கெனவே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், நோய்த் தொற்று பரவும் இடங்களில் இருப்பவர்களும், மூக்கு மற்றும் வாயை நன்றாக மறைக்கும் வகையில் முகத்தில் நன்கு பொருந்தும்படியான மாஸ்க் அணிய வேண்டும்.

பொதுவாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. ஆனால், குழந்தைகளின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் குழந்தைக்கு முகக்கவசம் அணிவிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு மாஸ்க்கைப் பயன்படுத்த அறிவுறுத்துவது குழந்தையின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர, மாஸ்க் இல்லாததால் எந்தக் குழந்தைக்கும் பள்ளியில் அனுமதி மறுக்கப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.