இனி வரும் காலத்தில் நாம் கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும், நிலையான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் தொற்றுநோயால் வரக்கூடிய கடுமையான சுவாச பிரச்னைகளை சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலகளவில் மனித ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் மனித நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து நேற்று பேசிய அவர், ``கோவிட் தொற்று எண்ணிக்கையின் நிலைமை அப்படியே இருக்கலாம் அல்லது நோய்த்தொற்றில் பல மாறுபாடுகள் தோன்றலாம், ஆனால் ஒமிக்ரான்தான் இறுதி என்று மட்டும் நம்ப வேண்டாம்" என எச்சரித்துள்ளார். மேலும் சில இலக்குகளை அடைவதன் மூலம் கடுமையான தொற்றிலிருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் மீளலாம் எனவும் கூறியுள்ளார்.
இந்தத் தொற்றுநோயின் காலகட்டம் எப்படி முடியும், எந்த அளவு தீவிரத்தை அடையும் என பல அனுமானங்கள் இருந்தாலும், அதிகளவில் வைரஸ் உருமாற்றங்கள் வந்தாலும், ஒமிக்ரான்தான் இறுதியானது என சொல்வதை நிறுத்தவேண்டும். மேலும், தொற்றுநோயின் கடுமையான கட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது, நம்முடைய கூட்டு முயற்சியின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
``அதாவது ஒவ்வொரு நாட்டிலுள்ள மக்கள்தொகையில், 70% மக்களுக்கு இந்த ஆண்டின் பாதிக்குள் தடுப்பூசி செலுத்துவது , கோவிட் தொற்றால் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்துவது, வைரஸின் மாறுபாடுகளை மிக நெருக்கமாகக் கண்காணிக்க சோதனைகளை மேம்படுத்துவது போன்ற உலக சுகாதார அமைப்பின் குறிக்கோள்களை அடைவதன் மூலம் இந்த ஆண்டுக்குள் கோவிட் தொற்றின் தீவிரத்திலிருந்து மீளலாம் என குறிப்பிட்டுள்ளார் .

இனிவரும் காலத்தில் நாம் கொரோனாவுடன் வாழ்வோம் என்பது உண்மைதான், அதற்காக அந்த வைரஸ் நமக்குள் இலவசமாக சவாரி செய்ய இடமளிக்கிறோம் என அர்த்தம் இல்லை. தொற்று உருவாக்கும் கடுமையான சுவாச நோய்களை சமாளிக்க நிலையான மற்றும் ஒருங்கிணைந்த நிர்வாகத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.