Published:Updated:

மாத்திரை, இன்சுலின் வேண்டாம்; இரண்டாம் வகை நீரிழிவை கட்டுப்படுத்தும் Whole Body Twin தொழில்நுட்பம்!

Whole Body Twin தொழில்நுட்பம் அறிமுக நிகழ்ச்சி

``இந்தத் தொழில்நுட்பத்தை டிரையல் செய்தபோது 83% பேர் பயனடைந்தனர். வணிக ரீதியான பயன்பாட்டின்போது 72% பேர் குணமாகியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பத்தை தனிநபரோ, தனி நிறுவனமோ அறிமுகம் செய்யவில்லை.''

மாத்திரை, இன்சுலின் வேண்டாம்; இரண்டாம் வகை நீரிழிவை கட்டுப்படுத்தும் Whole Body Twin தொழில்நுட்பம்!

``இந்தத் தொழில்நுட்பத்தை டிரையல் செய்தபோது 83% பேர் பயனடைந்தனர். வணிக ரீதியான பயன்பாட்டின்போது 72% பேர் குணமாகியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பத்தை தனிநபரோ, தனி நிறுவனமோ அறிமுகம் செய்யவில்லை.''

Published:Updated:
Whole Body Twin தொழில்நுட்பம் அறிமுக நிகழ்ச்சி

நவீன சமூகத்தில், 15 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், அந்நோயின் பாதிப்பின் வீரியத்தை இன்றுவரை மக்கள் உணரவில்லை .

இந்நிலையில், கலிபோர்னியா மற்றும் சென்னையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் டிவின் ஹெல்ட், ’Whole Body Twin’ என்ற தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. Whole Body Twin என்ற தொழில்நுட்பம், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes), உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் பிரச்னைகளை கட்டுக்குள் வைப்பதற்கும், குணப்படுத்தவும் உதவுகிறது.

டாக்டர் மாலுக்  மொஹமெத்
டாக்டர் மாலுக் மொஹமெத்

டாக்டர் மாலுக் மொஹமெத் இது குறித்து பேசுகையில், ``இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Randomize Trial செய்து பார்த்தோம். அதன் முடிவுகளை, அமெரிக்க நீரிழிவு நோய்க்கான சங்கத்தின் இதழில் (American Diabetes Association Aiabetics Journal) வெளியாகி உள்ளது. Whole Body Twin தொழில்நுட்பம் பயன்படுத்துவதால், மாத்திரை பயன்படுத்த வேண்டாம்; இன்சுலின் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இந்தத் தொழில்நுட்பத்தை டிரையல் செய்தபோது 83% பேர் பயனடைந்தனர். வணிக ரீதியான பயன்பாட்டின்போது 72% பேர் குணமாகியுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை தனிநபரோ, தனி நிறுவனமோ அறிமுகம் செய்யவில்லை. இதனை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்” என்றார்.

டாக்டர் பரமேஷ் ஷமன்னா பேசும்போது, ``ஒரு காலத்தில் நீரிழிவு நோய் பணக்காரர்களின் நோயாக இருந்தது. ஆனால் இப்போது சூழ்நிலை மாறிவிட்டது. இன்று இளைஞர்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இன்று பரவலாக காணப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோயை, மருந்துகள் இல்லாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்பது பெரும்பாலான மருத்துவர்களுக்கே தெரியவில்லை.

டாக்டர்  பரமேஷ்  ஷமன்னா
டாக்டர் பரமேஷ் ஷமன்னா

ஆனால் Whole Body Twin தொழில்நுட்பம் மூலம், இரண்டாம் வகை நீரிழிவு நோயை எளிதில் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

சரி, இது செயல்படும் முறை என்ன? சென்சார் மூலம் நம் உடல் தொடர்ந்து பரிசோதிக்கப்படும். உறக்கம், உடல் இயக்கம், உணவுப் பழக்கம் போன்றவை கண்காணிக்கப்படும். பின் நம் உடலுக்கு ஏற்றவாறு நாம் என்ன சாப்பிட வேண்டும், நாம் எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம், உறக்க நேரம் போன்றவற்றை Whole Body Twin பரிந்துரைக்கும்.

உதாரணமாக, நம் வீடுகளில் அம்மா, அப்பா என்று இருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால் அம்மாவிற்கு சோறு சாப்பிட்டால் எதுவும் ஆகாது. ஆனால் அப்பாவிற்கு சோறு சாப்பிட்டால் சர்க்கரை எகிரும். இது போன்ற பிரச்னைகளில், அவர் உணவுப் பழக்கம் கண்காணிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப அவருக்கு உணவுப் பரிந்துரை வழங்கப்பட்டு, நீரிழிவு நோய் கட்டுக்குள் கொண்டுவரப்படும்” என்றார்.

- கு.சௌமியா