Published:Updated:

இன்சுலின் விலை குறையும்! - உலக சுகாதார நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை

இன்சுலினுக்கான உலகச் சந்தையை வெறும் மூன்று உற்பத்தியாளர்கள் மட்டுமே கையில் வைத்துள்ளனர். அவர்கள்தாம் அதற்கான விலையையும் தீர்மானிக்கின்றனர்.

இன்சுலின்
இன்சுலின் ( Freepik )

உலகம் முழுவதும் டைப் 2 சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட 6.5 கோடி பேருக்கு தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த மக்கள்தொகையில் பாதி பேருக்கு மட்டுமே இன்சுலின் கிடைக்கிறது. இதுதவிர டைப் 1 சர்க்கரை நோயாளிகள் அனைவரும் உயிர்வாழ தினமும் இன்சுலின் அவசியப்படுகிறது. இன்சுலின் அனைத்து நோயாளிகளுக்கும் தடையின்றி கிடைக்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அதிக விலை மட்டுமே.

insulin
insulin
Pixabay

சர்க்கரைநோய்க்கான அத்தியாவசிய சிகிச்சையாக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1977-ம் ஆண்டு அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இன்சுலினையும் இணைத்தது உலக சுகாதார நிறுவனம்.

இந்நிலையில், உலக சர்க்கரைநோய் தினத்தை முன்னிட்டு இன்சுலின் விலையைக் குறைப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் முக்கியமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாகப் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரீயேசஸ், "அளவுக்கு அதிகமான மக்கள் இன்சுலினை வாங்க முடியாத பொருளாதார நிலையில் உள்ளனர். அதனால் அவர்கள் வாழ்க்கையும் அபாயத்தில் உள்ளது. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வசிக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் எட்டாக்கனியாக உள்ளது. அதிக வருமானமுள்ள நாடுகளிலும்கூட இன்சுலினுக்கான தேவை அதிகம் உள்ளது.

டைப் 3 சர்க்கரை நோய் எதுவென்று தெரியுமா? முதியவர்களுக்கு ஓர் அலர்ட்! #InternationalAlzheimersDay
Diabetes
Diabetes
Pixabay

காரணம், இன்சுலினுக்கான உலகச் சந்தையை வெறும் மூன்று உற்பத்தியாளர்கள் மட்டுமே கையில் வைத்துள்ளனர். அவர்கள்தாம் அதற்கான விலையையும் தீர்மானிக்கின்றனர்.

இன்சுலின் உற்பத்தி செய்யும் உரிமையை கூடுதல் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலானோர் அதை உற்பத்தி செய்ய முடியும்.

Diabetes
Diabetes
Pixabay

இதனால் அதிக எண்ணிக்கையிலான தரமுள்ள இன்சுலின் மருந்து உற்பத்தி செய்யப்படும். உற்பத்தி அதிகரிக்கும்போது விலை குறையும்" என்று தெரிவித்துள்ளார்.