Published:Updated:

சென்னை ஏன் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக தொடர்கிறது?

சென்னை
சென்னை

சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நிச்சயம் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம் காணப்படுவது இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்று புகழப்படும் சென்னையில்தான். எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சென்னையில் மட்டும் 570 நோயாளிகள் காணப்படுகின்றனர்.

Corona spread
Corona spread

இதற்கான காரணம் என்னவென்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்:

மும்பை, டெல்லி, அகமதாபாத், சென்னை போன்ற பெருநகரங்களில் இந்தப் பிரச்னை நீடிக்கிறது. சென்னையில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தர்மபுரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் வீடுகளின் அமைப்பு என்பது புவியியல் ரீதியாக இடைவெளிகளுடன் அமைந்துள்ளது. இதனால் மக்களும் தள்ளித்தள்ளி வசிக்கின்றனர். இது நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் அமைகிறது. சென்னையில் குறுகிய இடத்தில் பலர் வசிக்கின்றனர்.

மேலும், மக்கள் நடமாட்டமும் பிற இடங்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கிறது. மதியம் 1 மணிவரை ஊரடங்குக்கு தளர்வு கொடுக்கும் நேரங்களில் பகல் பொழுதில் மக்கள் அதிகளவில் நடமாடுகிறார்கள். பொருளாதார நடவடிக்கைகள், அரசின் நிர்வாக நடவடிக்கைகளை முழுவதுமாக நிறுத்த முடியாது.

Dr.Kulandaisamy
Dr.Kulandaisamy

அவை எப்போதும்போல் இயங்கியே ஆக வேண்டியிருக்கிறது. எனினும் பயணங்களைக் குறைத்துக்கொள்ளுதல், அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் சேர்வது போன்றவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தியிருக்கிறோம். சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நிச்சயம் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு நகர்ப்புறங்களில் வசிக்கும் வயதானவர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வயதானவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களில் வந்து தங்கள் பிள்ளைகளுடன் வசிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களும், அங்கிருந்து வந்து நகர்ப்புறங்களில் வசிப்பவர்களும் மக்கள்தொகை குறைவாக இருக்கும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பலாம்.

home
home
கட்டுக்குள் வராத கொரோனா - தொடரும் தொற்று அபாயம்… சென்னைக்கு நீடிக்கும் ஊரடங்கு! #WhatAfterMay3

அதேபோன்று பள்ளிகளுக்கு அதிக மாணவர்கள் ஒரே நேரத்தில் செல்ல நேரிடும். கொரோனா தாக்கம் முழுவதும் நீங்கும்வரை பள்ளிகள் இரண்டு ஷிஃப்ட்டாக செயல்படலாம். ஒரே வகுப்பில் ஒன்றாக 60 மாணவர்கள் படிக்கும் இடத்தில் காலை 30, பிற்பகல் 30 மாணவர்கள் என்று வரவழைத்து வகுப்பெடுக்கலாம். இதனால் நோய்ப்பரவலுக்கான வாய்ப்பைக் குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு