Published:Updated:

Doctor Vikatan: உடல் எடையை குறைக்க உள்ளேன்; சர்க்கரை தவிர்த்து தேனுக்கு மாறலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

என் வயது 40. எடைக்குறைப்பு முயற்சியைத் தொடரவிருக்கிறேன். முதல் முயற்சியாக சர்க்கரைக்கு பதில் தேனுக்கு மாற நினைக்கிறேன். அது சரியா?

- மகேந்திரன் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

``நேற்றுவரை சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டே பழகியிருப்பார்கள். வெயிட்டை குறைக்கிறேன் என்ற பெயரில் இன்று சர்க்கரைக்கு பதில் தேனுக்கு மாறுவார்கள். சர்க்கரை என்பது அதிக இனிப்புச்சுவையைக் கொண்டது. அதனுடன் ஒப்பிடும்போது தேனில் இனிப்புச்சுவை குறைவாக இருக்கும். அந்த இனிப்பு பத்தாமல் சர்க்கரையைவிட, தேன் ஆரோக்கியமானதுதானே என நினைத்துக்கொண்டு இரண்டு, மூன்று டீஸ்பூன் என அவர்கள் பழகிய அந்த இனிப்பு வரும்வரை தேன் சேர்த்துக்கொள்வார்கள். அதன் விளைவாக கலோரி அதிகரிக்கும். எடை குறையாது.

பால், தேன், டீ தூள் ஆகியவற்றில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில வழிகள்! #Adulteration

எனவே இப்படியான அதிரடி நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஒரு டீஸ்பூன் சர்க்கரையை, முக்கால் டீஸ்பூனாக குறையுங்கள். ஒரு வாரம் கழித்து, அதை அரை டீஸ்பூனாக குறையுங்கள்.

இப்படி படிப்படியாக குறைக்கும்போது, ஒரு கட்டத்தில் அதற்கு நீங்கள் பழகிவிடுவீர்கள். அதன் பிறகு நாட்டுச் சர்க்கரைக்கோ, தேனுக்கோ மாறலாம்.

Honey
Honey
Photo by Alexander Mils on Unsplash
Doctor Vikatan: தடுப்பூசிக்குப் பிறகு உடல் பருமன் அதிகரித்தது போல் உணர்கிறேன்; ஏன்?

அது உங்களுக்கு எளிதாக இருக்கும். மற்றபடி சர்க்கரையோடு ஒப்பிடும்போது நாட்டுச்சர்க்கரை, தேன் போன்றவை ஆரோக்கியமானவையே."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு