Published:Updated:

`குணமடைந்த பின்னும் கொரோனா பாசிட்டிவ்... அச்சப்படத் தேவையில்லை!’ - விளக்கும் உலக சுகாதார நிறுவனம்

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட 172 பேரிடம் சீனா நடத்திய ஆய்வில், நோய் குணமடைந்த 7 முதல் 10 நாள்களில் அவர்களில் 25 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.

கொரோனாவுக்கு தடுப்பூசியோ மருந்துகளோ இல்லை என்பதுதான் உலகமே அதைக்கண்டு நடுங்குவதற்குக் காரணம். கொரோனா பாதித்து, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய சிலருக்குப் பரிசோதனை செய்ததில் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என்று முடிவுகள் வந்துள்ளன. இது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸுடன் ஒத்த வைரஸ் கிருமிகளுக்கு இத்தகைய தன்மை இல்லை. பொதுவாக வைரஸ் தாக்கத்திலிருந்து மீளும் ஒருவர் நிரந்தரமாக அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் தடுப்பாற்றலைப் பெறுவார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட பலருக்கு மீண்டும் நோய் உறுதி செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட 172 பேரிடம் சீனா நடத்திய ஆய்வில், நோய் குணமடைந்த 7 முதல் 10 நாள்களில் அவர்களில் 25 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.

லாக் டௌன் 4.0ல் தமிழகத்தின் ஐந்து நகரங்களுக்கு விலக்கு இல்லை?! -வெளியான தகவல்கள் #NowAtVikatan

இது குறித்து விளக்கிய, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டங்களின் உறுப்பினரும் தொற்றுநோய் நிபுணருமான மரியா வான் கெர்ஹோவ், "கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவரின் நுரையீரல் நோய்த்தொற்றிலிருந்து மீளும்போது, இறந்த செல்களை நுரையீரல் வெளியேற்றும்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

அந்தச் செயல்முறை நடைபெறும்போது பரிசோதனை செய்யப்படும் நபருக்கு பாசிட்டிவ் முடிவுகள் வரும். இந்த முடிவுகள் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதன் குறியீடு அல்ல, மாறாக நோயிலிருந்து மீண்டு நுரையீரல் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் படிநிலையே" என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 10 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு #NowAtVikatan

சீனாவில் நடைபெற்ற ஆய்வு தொடர்பாகப் பேசியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள், "24 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை ஆர்.டி. பி.சி.ஆர் (rtPCR) பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தால், அந்த நோயாளியைக் குணமடைந்தவராகக் கருத முடியாது. 48 மணி நேர இடைவெளியில் செய்யப்படும் இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என்று வரும் பட்சத்தில்தான் நோயாளி குணமடைந்தவராகக் கருதப்பட வேண்டும்.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்
AP

கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் மீண்டவரையும் ஓரளவு குணமடைந்தவரையும் வரையறுப்பதிலிருக்கும் குழப்பங்களைக் களைய, நோய்த்தொற்றின் அளவைக் கணக்கிடுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்" என்று பரிந்துரைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு