Published:Updated:

WHO அங்கீகரித்த உலகின் முதல் மலேரியா தடுப்பூசி; ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு எந்தளவு பயனளிக்கும்?

முதன்முறையாக RTS, S/AS01 என்னும் மலேரியா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது தற்போது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கொசுக்களால் பரவும் காய்ச்சலான மலேரியா நோய்க்கு, சிகிச்சையளிக்க திறன் வாய்ந்த மருந்துகள் உள்ளன. ஆனாலும் மருந்துகள் சரியாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைப்பதில்லை. மலேரியா நோய்க்குத் தடுப்பூசி இல்லாததால் ஆண்டுக்கு 4 லட்சம் உயிர்கள் பலியாகின்றன. இதனால், உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து மலேரியா தடுப்பூசியை உருவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி வந்தது. இதற்கு பலனாக முதன்முறையாக RTS, S/AS01 என்னும் மலேரியா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது தற்போது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Malaria Vaccination in Kenya
Malaria Vaccination in Kenya
AP Photo/Karel Prinsloo, File
நிபா வைரஸ்: நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன? - விரிவான வழிகாட்டி

ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியா அதிக அளவில் பரவி வருகிறது. அதிலும் அதிகபட்சமாக நைஜீரியா மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் குழந்தைகள் மலேரியாவுக்கு பலியாவது தொடர்கதையாகிறது. இரண்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை இங்கே மலேரியாவுக்குப் பலியாகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு முதல் பரிசோதனை முறையில் கானா, கென்யா மற்றும் மாலாவி போன்ற நாடுகளில் 20 லட்சம் மலேரியா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தற்போது இதனால் நல்ல பலன் கிடைத்ததை அடுத்து உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. மலேரியா தாக்கம் அதிகமுள்ள நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, 2 வயதிற்குள் நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்த உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தடுப்பு, தடுப்பூசிகள் துறையின் இயக்குநர் கேட் ஓ பிரையன், ``உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் தீவிர மலேரியா பாதிப்பை 30% வரை இந்த தடுப்பூசிகள் குறைக்கும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி வழங்குவது எளிதாகச் சாத்தியப்படக் கூடியது எனக் கூறிய அவர், ``தடுப்பூசிகள் உலகின் மூலை, முடுக்குகள் வரை சென்றடையும். ஆப்பிரிக்க நாடுகளில் தூங்குவதற்குக் கொசுவலைகூட இல்லாத மூன்றில் இரண்டு குழந்தைகள், இந்தத் தடுப்பூசியால் பயனடைவார்கள். Mosquirix என்னும் நிறுவனத்தால் எம்ஆர்என்ஏ (mRNA technology) தொழில்நுட்பத்தைக் கொண்டு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ், ``இது ஆப்பிரிக்க மக்களுக்காக ஆப்பிரிக்கர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

WHO Director-General Tedros Adhanom Ghebreyesus
WHO Director-General Tedros Adhanom Ghebreyesus
Denis Balibouse/Pool Photo via AP
Covid Questions: மாஸ்க் அணிவதால் முகமெல்லாம் பருக்கள்; என்னதான் தீர்வு?

மற்ற பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ் காய்ச்சலைப் போல் இல்லாது மலேரியா, நோய் கொசுக்கள் எடுத்துவரும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் என்ற ஒட்டுண்ணியால் ஏற்படக்கூடியது. ஒட்டுண்ணிகளுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்க பிராந்திய இயக்குநர் மாட்ஷிடிசோ மொய்தி, ``மலேரியாவினால் அதிக சுமைகளைச் சுமக்கும் கண்டத்திற்கு இந்தத் தடுப்பூசி அறிவிப்பு நம்பிக்கை அளிக்கிறது" என்று வரவேற்றுள்ளார்.

இந்த மலேரியா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்குவதற்கான நிதிப் பங்கீடு பற்றி, கவி (Gavi) தடுப்பூசி கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய பங்குதாரர்கள் முடிவு செய்வர். எந்தெந்த இடங்களில் தடுப்பூசி தேவை அதிகம் உள்ளது என்பதும் ஆராயப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு