தொழுநோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தால் கைகால், கழுத்துப் பகுதிகளில் உள்ள நரம்புகளைத் தொட்டுப் பார்ப்பார்கள் மருத்துவர்கள். நரம்புகள் தடித்து, கயிறுபோல மாறியிருக்கும். குறிப்பாக, முழங்கையிலுள்ள நரம்பு. முழங்கை லேசாக எதிலேனும் இடித்தால் ‘ஷாக்’ அடித்தது போன்ற உணர்ச்சி ஏற்படுமல்லவா... அந்த உணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு, தொழுநோய் வந்தால் தடித்துவிடும். அதைப் பிடித்துப் பார்த்தாலே தொழுநோயின் வருகையைக் கண்டுபிடித்துவிட முடியும். தொழுநோயில் ‘லெப்ரமேட்டஸ் லெப்ரஸி’ (Lepromatous Leprosy) வகை பாதிப்புதான் சிக்கலானது. இதை குணப்படுத்துவதும் கொஞ்சம் சிரமம். இந்த வகை நோயாளிகளே நோயை அதிகமாகப் பரப்பவும் செய்வார்கள். ‘டியூபர்குளாய்டு லெப்ரஸி’ (Tuberculoid Leprosy) நோயாளிகள் மூலம் நோய் பெரிய அளவில் பரவாது.

உலகளவில் இரண்டரைக் கோடி தொழுநோயாளிகள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகம். குறிப்பாக, இந்தியா. 1982-ம் ஆண்டில் இந்தியாவில் 50 லட்சம் தொழுநோயாளிகள் இருந்தார்கள். தொழுநோய் பரவும் வேகத்தைக் கண்டு திகைத்துப்போன மத்திய மாநில அரசுகள், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டின. ‘தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் விரிவான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது.

நாடு முழுவதும் தொழுநோய் பாதித்தவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்காவது தொழுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பதிவுசெய்தார்கள். இதற்கென்று அதிகாரிகள், ஊழியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நோயாளிகள் கண்டறியப்பட்டு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சைகள் தரப்பட்டன. இந்தத் தீவிர நடவடிக்கை காரணமாக தொழுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் இரண்டு லட்சமாகக் குறைந்துவிட்டதாக அரசுப் பதிவேடுகள் சொல்கின்றன. ஆனால், ‘இந்தப் புள்ளி விவரங்கள் தவறானவை, முறைப்படி மீண்டும் தொழுநோய் குறித்த களப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்’ என்று மருத்துவச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். தொழுநோய் ஒழிப்புத் திட்டம் முன்பு தனித்துறையாகச் செயல்பட்டு வந்தது. இப்போது அது பொது சுகாதாரத்துறையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. சுகாதார ஆய்வாளர்கள் வீடு வீடாகச் சென்று, நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சையளித்த நிலை மாறி, ‘நோய் இருந்தால் ஆரம்ப சுகாதார மையத்துக்கோ, மருத்துவமனைக்கோ வந்து சிகிச்சை பெற்றுச் செல்லுங்கள்’ என்ற நிலை வந்துவிட்டது. மேலும் பயிற்சி பெற்ற தொழுநோய்ப் பணியாளர்கள் அருகிவிட்டார்கள்.

தொழுநோயிலிருக்கும் பெரிய பிரச்னை, உடலில் ஏற்படும் மாற்றங்களே. நோயை குணப்படுத்தினாலும்கூட இந்த மாற்றங்களை முழுமையாகச் சரிசெய்ய முடியாது. காலம் முழுவதும் இந்த பாதிப்பை சுமந்துகொண்டே வாழவேண்டியிருக்கும். தொழுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். உடலில் எந்தப் பகுதியிலேனும் வெள்ளை நிறத்தில் தேமல் மாதிரி உணர்வற்ற புள்ளிகள் இருந்தால் எச்சரிக்கை அடைய வேண்டும். நோயின் தன்மை பெரிதானால் நரம்புக் கோளாறுகள் ஏற்படும். உலக சுகாதார நிறுவனம், தொழுநோய் சிகிச்சை தொடர்பாக நிறைய வழிமுறைகளைத் தயாரித்து அளித்திருக்கிறது. நரம்பு சார்ந்த பிரச்னைகளோடு நோயாளிகள் வரும்போது மருத்துவர்கள் தொழுநோயையும் மனதில்வைத்துக்கொண்டு சோதிக்க வேண்டும் என்பது அதில் இடம்பெற்றுள்ள முக்கியப் பரிந்துரை.

நமக்கு வந்திருப்பது தொழுநோய் என்று தெரியாமலேயே நம் மத்தியில் பலநூறு பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சோகம். தொழுநோய் மனிதகுலத்துக்கு ஏற்படுத்தும் சவால் அதுதான். இந்த நோயை ரத்தத்தையோ, சிறுநீரையோ சோதனை செய்தெல்லாம் கண்டறிய முடியாது. ‘பயாப்ஸி’ செய்துதான் கண்டறிய வேண்டும். காது அல்லது நரம்பில் சிறு பகுதியெடுத்து சோதிக்க வேண்டும்.

(நிறைந்தது)