Published:Updated:

``நீங்கள் தனியாக இல்லை!" - மனநலன் குறித்து வலியுறுத்தும் தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் தன் இன்ஸ்டாகிராமில் சரிபார்க்கப்பட்ட மனநல ஹெல்ப்லைன்களின் பட்டியலைப் பகிர்ந்திருக்கிறார்.

``நீங்கள் தனியாக இல்லை!" - மனநலன் குறித்து வலியுறுத்தும் தீபிகா படுகோன்

பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் தன் இன்ஸ்டாகிராமில் சரிபார்க்கப்பட்ட மனநல ஹெல்ப்லைன்களின் பட்டியலைப் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:
தீபிகா படுகோன்

பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் தன் இன்ஸ்டாகிராமில் சரிபார்க்கப்பட்ட மனநல ஹெல்ப்லைன்களின் பட்டியலைப் பகிர்ந்திருக்கிறார். கோவிட் தொற்று அதிவேகமாக அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் வலுவான மன ஆரோக்கியம் அவசியம் என்பதற்காகவே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார் தீபிகா.


``லட்சக்கணக்கான மக்கள் (நானும் என் குடும்பத்தினரும் உட்பட) இப்போது உடலளவிலோ, மனதளவிலோ பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். இந்த நெருக்கடியிலிருந்து மீள நமது மனநலம் மிக முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Mental Health
Mental Health

நினைவில் கொள்ளுங்கள்... நீங்கள் தனியாக இல்லை. நாம் ஒன்றாகவே இருக்கிறோம். மிக முக்கியமாக, நமக்கு நிறைய நம்பிக்கை உள்ளது!'' என்று கூறியுள்ள தீபிகா #YouAreNotAlone என்ற ஹேஷ்டேக்கையும் பிரபலப்படுத்தியிருக்கிறார். அதோடு, `The Live Love Laugh Foundation' என்கிற மனநல அமைப்பையும் தன் பதிவில் இணைத்திருக்கிறார். அவள் அளித்துள்ள 12 ஸ்லைடுகளில் மனநலம் காக்க உதவும் அத்தியாவசிய தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தீபிகா உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தங்கள் சமூக ஊடகங்களை அண்மைக்காலமாக, அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் ஆலியா பட், ஜான் ஆபிரகாம், கத்ரினா கைஃப், விக்கி கெளசல், டாப்ஸி பன்னு, பூமி பெட்னேகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

வதந்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம்; கொரோனா வைரஸ் எழுச்சிக்கு மத்தியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதுவே தீபிகா படுகோன் உட்பட அத்தனை பிரபலங்களும் மக்களுக்குச் சமூகவலைதளங்கள் வாயிலாகச் சொல்லும் செய்தி!

தீபிகா குறிப்பிட்டுள்ள அமைப்பு: thelivelovelaughfoundation.org

தீபிகா அளித்துள்ள ஹெல்ப்லைன் எண்களை இங்கு காணலாம் :
https://www.instagram.com/p/COW9RTpjc_-/

- எஸ்.சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism