Published:Updated:

2 காஸ் சிலிண்டர் வைத்திருந்தால், முதியோர் உதவித் தொகை ரத்து... அதிர்ச்சியில் மூத்த குடிமக்கள்!

காஸ் சிலிண்டர்
News
காஸ் சிலிண்டர்

தமிழக அரசின் அறிவிப்பால், காஸ் சிலிண்டரை சரண்டர் செய்வதா அல்லது மாதம்தோறும் கிடைக்கும் ரூ.1,000-த்தை இழப்பதா என்று தெரியாமல் தவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் மூத்த குடிமக்கள்.

2 காஸ் சிலிண்டர் வைத்திருந்தால், முதியோர் உதவித் தொகை ரத்து... அதிர்ச்சியில் மூத்த குடிமக்கள்!

தமிழக அரசின் அறிவிப்பால், காஸ் சிலிண்டரை சரண்டர் செய்வதா அல்லது மாதம்தோறும் கிடைக்கும் ரூ.1,000-த்தை இழப்பதா என்று தெரியாமல் தவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் மூத்த குடிமக்கள்.

Published:Updated:
காஸ் சிலிண்டர்
News
காஸ் சிலிண்டர்

இரண்டு காஸ் சிலிண்டர் வைத்திருந்தால், முதியோர் உதவித் தொகை இனி ரத்து செய்யப்படும் எனத் தமிழக அரசாங்கம் அறிவித்திருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் மூத்த குடிமக்கள். இதனால் காஸ் சிலிண்டரை சரண்டர் செய்வதா அல்லது மாதம்தோறும் கிடைக்கும் ரூ.1,000-த்தை இழப்பதா என்று தெரியாமல் தவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் மூத்த குடிமக்கள்.

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகம் முழுக்க பாதுகாப்பாற்ற நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது மாதம்தோறும் மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்கிலேயே அரசாங்கம் செலுத்திவிடுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சில மாதங்களாக இந்த உதவித் தொகை அளவு மிகப் பெரிய அளவில் உயர்ந்திருப்பதால், இந்த உதவித் தொகைகள் யாரெல்லாம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்பது குறித்து சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது தமிழக அரசாங்கம்.

இரண்டு காஸ் சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள், அரசுப் பணி செய்தவர்கள், ரூ.1 லட்சத்துக்குமேல் சொத்துப் பரிமாற்றம் செய்தவர்கள், ரூ.1 லட்சத்துக்குமேல் நகைக்கடன் பெற்றவர்கள், சர்க்கரை மற்றும் `N’ குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள்

இந்த நிபந்தனைகளில் இரண்டு காஸ் சிலிண்டர்கள் வைத்திருப்பவர்களையும் சேர்த்திருப்பது பெரும்பாலான மூத்த குடிமக்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. காரணம், இன்றைய தேதியில் ஒரு குடும்பத்துக்கு ஒரு காஸ் சிலிண்டர் ஒரு மாதம் மட்டுமே வருகிறது. ஒரு காஸ் சிலிண்டர் தீர்வதற்குள் அடுத்த சிலிண்டரை வாங்க ஆர்டர் மட்டுமே பிரச்னை இல்லாமல் தொடர்ந்து சமையல் செய்ய முடியும். இரண்டு காஸ் சிலிண்டரில் ஒன்றைத் திரும்பத் தந்துவிட்டால், அடுத்த சிலிண்டர் தீர்ந்த பின்னர்தான் ஆர்டர் செய்ய முடியும். அல்லது இரண்டாவது காஸ் சிலிண்டர் வந்தவுடன், முதல் காஸ் சிலிண்டர் முழுவதுமாகக் காலி ஆகவில்லை என்றாலும் திரும்பத் தர வேண்டும்.

இது ஒரு பெரிய பிரச்னை என்றால், இன்னொரு முக்கியமான பிரச்னை, காஸ் சிலிண்டரைத் திரும்பத் தந்தால், அதற்கான டெபாசிட் தொகை ரூ.450 மட்டுமே திரும்பக் கிடைக்கும். ஒருவேளை, மீண்டும் இரண்டாவது காஸ் சிலிண்டர் வாங்க வேண்டுமெனில், புதிதாக ரூ.2,500 கட்டித்தான் புதிய காஸ் சிலிண்டரைப் பெற வேண்டும். மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுகிறவர்களுக்கு இந்த ரூ.2,500-க்கு எங்கே போவார்கள் என்கிற கவலையும் மூத்த குடிமக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்
Photo: Vikatan / Muthuraj.R.M

எனவே, இரண்டு காஸ் சிலிண்டரை வைத்திருந்தாலும், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையை நிறுத்தக் கூடாது எனப் பலரும் வேண்டுகோள் விடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். மூத்த குடிமக்களின் இந்தக் கோரிக்கையை தமிழக அரசாங்கம் பரிசீலித்து நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்போம்!