Published:Updated:

மகனுக்குக் கொரோனா அறிகுறி.. மறைத்த பெண் அதிகாரி! - அதிரடி காட்டிய ரயில்வே நிர்வாகம்

கொரோனா பாதிப்பு சுத்தம் செய்யப்படும் ரயில்
கொரோனா பாதிப்பு சுத்தம் செய்யப்படும் ரயில்

ஜெர்மனியிலிருந்து திரும்பிய ஐந்து நாள்களுக்குப் பிறகு, அந்த இளைஞரிடத்தில் சோதனை நடத்தியபோது கொரோனா பாசிடிவ் எனத் தெரிய வந்தது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. அடுத்த இரு வாரங்கள் மக்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் மக்கள் முன்கூட்டியே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன் மகனுக்குக் கொரோனா பாதிப்பு இருந்ததை மறைத்த ரயில்வே அதிகாரி பெங்களூருவில் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

ரயில்வேயில் துணை மேலாளராகப் பணியாற்றும் பெண் அதிகாரியின் மகன் ஒருவர் சமீபத்தில் இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டுத் தாய் நாடு திரும்பியிருக்கிறார். பெங்களூரு விமான நிலையத்தில் சோதித்தனர். வீடு சென்றதும் அந்த இளைஞர் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பெண் அதிகாரி, மகனை தன் வீட்டில் தங்க வைத்தால் , மற்றவர்களுக்கும் நோய் பரவும் என்று பயந்துள்ளார். இதனால், தன் மகனுக்குக் கொரோனா அறிகுறி இருப்பதை மறைத்து ரயில்வே கெஸ்ட் ஹவுஸில் அறை புக் செய்ய முடிவு செய்துள்ளார்.

தன் மகனின் டிராவல் ஹிஸ்ட்ரியை மறைத்து, பெங்களூரு ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே காலனிப் பகுதியில் தென்மேற்கு ரயில்வேக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் அவரைத் தங்க வைத்துள்ளார். ஐந்து நாள்களுக்குப் பிறகு அந்த இளைஞரிடத்தில் சோதனை நடத்திய போது, கொரோனா தாக்கியிருப்பது தெரிய வந்தது.

தன் மகனின் ட்ராவல் ஹிஸ்ட்ரியை மறைத்து, மற்றவர்கள் உயிருடன் விளையாடியுள்ளார்.
தென்மேற்கு ரயில்வே செய்தி தொடர்பாளர்

இந்தத் தகவல் வெளியே கசிந்தது. கொரோனா அறிகுறியுடன் வந்த மகனை வீட்டில் தனிமைப்படுத்தாமல், ரயில்வே கெஸ்ட் ஹவுஸைப் பயன்படுத்தியதற்காக, அந்தப் பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

``உறுதியானது 3 பேர்; 1,94,236 பேருக்கு பரிசோதனை; 39 பேர் அனுமதி" - அமைச்சரின் கொரோனா தகவல்

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் விஜயா கூறுகையில், ''ரயில்வே காலனியில் தன் மகனைத் தங்க வைத்து மற்றவர்கள் உயிருடன் அந்த அதிகாரி விளையாடியுள்ளார். இத்தகையை அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு