மத்தியப்பிரதேசம், பன்னா மாவட்டத்தில் உள்ள சமேலி பாய் என்ற பெண்ணுக்கு சுரங்கத்தில் 2.08 காரட் வைரம் கிடைத்துள்ளது.
சிறு வயதில் கீழே காசு கிடைத்தால் அதைக் கொண்டு போய் சிறு சிறு தின்பண்டங்களை வாங்கித் தின்றிருப்போம். சில பேருக்கு சிறிய தொகையிலிருந்து, நகை வரை கூட கிடைத்திருக்கலாம். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருக்கு 2.08 காரட் வைரம் கிடைத்துள்ளது. இந்த வைரக்கல் ஏலத்தில் 10 லட்சம் வரை விற்பனை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இல்லத்தரசியான சமேலி பாயும் அவரின் கணவர் அரவிந்த் சிங்கும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின்போது கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி பகுதியில் உள்ள சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக அதில் பெரும் மதிப்புள்ள வைரம் இவர்கள் கையில் சிக்கியுள்ளது.
அந்த வைரத்தை வைர அலுவலகத்தில் கொடுத்தார் சமேலி. வரவிருக்கும் ஏலத்தில் வைரம் விற்பனைக்கு வைக்கப்படும், மேலும் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி விலை நிர்ணயிக்கப் படும். அரசு விதிக்கும் ராயல்டி மற்றும் வரிகள் அனைத்தையும் கழித்த பிறகு மீதமிருக்கும் வைரத்தின் ஏலத் தொகை இந்தத் தம்பதிக்கு வழங்கப்படும்.
ஏலத்தில் வரவிருக்கும் பணத்தைக் கொண்டு பன்னாவில் வீடு ஒன்றை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக அரவிந்த் சிங் கூறியுள்ளார்.