வெளியிடப்பட்ட நேரம்: 05:48 (23/08/2017)

கடைசி தொடர்பு:07:39 (23/08/2017)

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு ரயில் விபத்து!

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் தடம் புரண்டது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, ஹைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. அதிகாலை 2.40 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், ரயில் இன்ஜினுடன் சேர்த்து 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், 100 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம்குறித்து முழுமையாகத் தெரியவில்லை, தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மீட்புப் பணிக்காக டெல்லியிருந்து ஒரு மருத்துவ ரயில் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன், உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், 23 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் ஒரு ரயில் விபத்து அதே மாநிலத்தில் நடந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க