Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்த்தி சிதம்பரம் இன்று சி.பி.ஐ முன் ஆஜர்!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், இன்று சி.பி.ஐ முன் ஆஜராக உள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அவர் உள்ளிட்ட நான்கு பேர், தேடப்படும் நபர்களாக உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, சி.பி.ஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்குத் தடை இல்லை என்று உத்தரவிட்டது. அப்போது, 'நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்கும் நீங்கள், சி.பி.ஐ முன் ஆஜராகி விளக்கமளிக்கத் தயங்குவது ஏன்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, 'பல்வேறு வழக்குகளில் சி.பி.ஐ முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளதாகவும் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டால், சி.பி.ஐ முன் ஆஜராகத் தயார்' என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சி.பி.ஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இன்று கார்த்தி சிதம்பரம் டெல்லியில் இருக்கும் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement