Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா?

தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றா? இல்லையா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளிக்கிறது.
 

உச்சநீதிமன்றம்


ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பது Right to Privacy எனப்படும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமைக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்தது. ஏற்கெனவே, கடந்த 1954-ம் ஆண்டு 6 நீதிபதிகள் கொண்ட அமர்வு மற்றும் 1962-ம் ஆண்டு 8 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆகியவை தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை இல்லை என்று உத்தரவிட்டிருந்தது. மேலும், சட்டம் வழங்கிய உரிமைகளின் ஒன்றாகவே இதுபார்க்கப்பட வேண்டும் என்றும் அந்த தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய மத்திய அரசு, இந்த விவகாரம் தொடர்பாக 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வால் மட்டுமே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடியும் என்று வாதாடியது. இதையடுத்து இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 

மத்திய அரசின் வாதம்:

தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையல்ல. நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். உணவு, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாடுகின்றனர். தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டால் அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்களை அளிப்பதில் சிக்கல் ஏற்படும். குறிப்பாக ஆதார் மூலம் முறைப்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகளை உரிய பயனாளிகளுக்கு அளிக்க இயலாமல் போகும். 

சாமானியர் ஒவ்வொருவரின் வாழ்விலும் எதிரொலிக்கும் தீர்ப்பு:

அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும், திட்டங்களின் பயன்கள் போன்றவற்றைப் பெற ஆதார் தேவை என்ற நிலை கிட்டத்தட்ட உருவாக்கப்பட்டுவிட்டது. ஆதார் இல்லாமல் வருமான வரி கணக்கைக் கூட தாக்கல் செய்ய முடியாது நிலை உள்ளது. இந்த வழக்கில் தனிநபர் ரகசியம் காப்பது உரிமை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களை அரசு சேகரிப்பது விதிமீறல் என்ற சூழல் ஏற்படும். இதனாலேயே, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடுமையான வாதங்களை முன்வைத்து வருகிறது. அதேபோல், செல்போனில் இரண்டு தனிநபர்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை பகிர்ந்துகொள்வதும் ஒரு வகையான தனிநபர் ரகசியம் பாதுகாப்பதே. தொலைத்தொடர்பு சேவை வழங்கும் எந்தவொரு நிறுவனத்தாலும் இந்த தகவல்களை சட்டபூர்வமாக வேறு எந்த காரியத்துக்கும் பயன்படுத்த முடியாது. இதுதொடர்பான வழக்கில் இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement