Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யமுனா சீர்கேட்டுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: அரசைக் கண்டித்த பசுமைத் தீர்ப்பாயம்!

யமுனை மாசடைந்த விவகாரத்தில், மத்திய மற்றும் மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

யமுனை நதி

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, கடந்த மார்ச் மாதம் யமுனை நதிக்கரையில், 'உலகக் கலாசாரத் திருவிழா' என்ற மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்தியது. "யமுனை ஆற்றங்கரையை மாசுபடுத்தும் செயல்" என அப்போதே, எதிர்ப்புத் தெரிவித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இதுகுறித்து ஆராய்ந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சசி சேகர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

அந்த அறிக்கையில், "நிகழ்ச்சி நடந்த யமுனையின் மொத்த நதிக்கரையும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதம் என்பது சிறிய அளவில் கிடையாது. அந்த இடத்தில் இருந்த மரங்கள், செடிகள் என எல்லாமே அழிக்கப்பட்டுள்ளது. அந்த நிலம் சமமாக, இறுக்கமாக மாற்றப்பட்டுள்ளது. மொத்த சேதங்களைக் கணக்கிடவே முடியாது. அழிந்த பெரும்பாலான தாவரங்களை மீட்கவும் முடியாது” என்றிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டை ஆராய்ந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தற்போது மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement