சிக்கலில் இன்ஃபோசிஸ் : உச்சத்தில் நிறுவனத்தின் பங்குகள்!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தினுள் நிகழும் குளறுபடிகளுக்கு மத்தியில் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் மீண்டும் நந்தன் நிலகேனி பதவியேற்கிறார் என்ற செய்தி வெளியான உடனே பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கியுள்ளன.

நந்தன் நிலகேணி

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமைச் செயலதிகாரி மற்றும் முதன்மைச் செயலதிகாரியான விஷால் சிக்கா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தார். இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தன்மீது வைக்கும் தனிப்பட்ட தாக்குதல்களால் பதவியை ராஜினாமா செய்ததாக விஷால் சிக்கா கூறியிருக்கிறார். அதனால் சுதந்திரமாகச் சிந்தித்து தம்மால் செயல்பட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்ஃபோசிஸ் நிறுவன ஒரு பங்கின் மதிப்பு 13 சதவிகித அளவுக்குக் குறைந்து, ஒரு கட்டத்தில் ரூ.884 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தை முடிவில், அந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் 9.6 சதவிகிதம் அளவுக்குக் குறைந்தது. இதன்மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை முதலீட்டு மதிப்பில் ரூ.24,839 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் முக்கிய நிறுவனர்களுள் ஒருவரான நந்தன் நிலகேனி நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்த சரிவில் பயணித்து வந்த இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளின் வர்த்தகம் தற்போது உயரத்தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்தியப் பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!