Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் ரயில் விபத்துகள்: மும்பை அருகே தடம் புரண்ட ரயில்!

மும்பை புறநகர் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

மும்பை ரயில் விபத்து

மும்பை, மேற்கு மாஹிம் அருகே புறநகர் ரயில் ஒன்று இன்று காலை தடம் புரண்டது. இந்த விபத்தில் பயணிகளில் ஐந்து பேர் காயமடைந்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து அந்தேரி வரையில் செல்லும் புறநகர் ரயிலின் நான்கு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகியதால் தடம் புரண்டது. இதனால் வதாலா- அந்தேரி இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் விபத்தில் காயமடைந்த ஐந்து பயணிகளுக்கும் உடனடியாக மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த விபத்து சிறிய அளவிலான பாதிப்பு ஏற்படுத்திய போதும், கடந்த ஒரு வாரத்தில் நிகழும் நான்காவது ரயில் விபத்து ஆகும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 5 நாள்களில் இரண்டு ரயில் விபத்துகள் நடந்தன. அம்மாநிலத்தின் அவுரியா மாவட்டத்தில் கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து வந்த காஃபியாத் விரைவு ரயிலில் 10 பெட்டிகள் தடம்புரண்டதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்னர் முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 23 பேர் பலியாயினர்; 156 பேர் காயமடைந்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement