Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹரியானாவில் பதற்றம்..! 100 வாகன அணி வகுப்பில் நீதிமன்றத்துக்குச் சென்ற ராம் ரஹிம் சிங்

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டச் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங், பஞ்ச்குலாவிலுள்ள சி.பி.ஐ நீதிமன்றத்துக்குச் சென்றடைந்தார்.


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு பஞ்ச்குலாவிலுள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு செல்வதற்காக சச்சா சவுதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா மாவட்டத்திலிருந்து ராம் ராஹிம் காலை 11 மணி அளவில் புறப்பட்டார். புல்லட் புரூப் வாகனத்தில் வரும் அவருக்கு வாகனத்துடன் 100 மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அவருடைய வாகனங்கள் செல்லும் வழி நெடுக அவருடைய லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். காலையிலிருந்து காத்திருந்த அவர்களில் ஒரு சிலர் மயங்கியும் விழுந்தனர். பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீம் சிங்குக்கு இன்று தீர்ப்பு வரவுள்ளதால் ஹரியானா மற்றும் சண்டிகர் மாநிலங்கள் மிகவும் பதற்றமாக உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்ச்குலாவை ஒட்டிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் முன்னதாகவே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்துக்குச் செல்லும் 22 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25, 26-ம் தேதிகளில் பட்டிண்டா, புத்லதா, சங்க்ருர் மற்றும் பர்னாலா ஆகிய இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய 3 இடங்களில் 72 மணி நேரத்துக்கு மொபைல் இணைய சேவைகள் மற்றும் தரவு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ரஹிம் சிங்குக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement