Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஞ்சாப், ஹரியானா கலவரம் - 17 பேர் பலி

சாமியார் கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா மாநில சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறையால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

punjab
 

ஹரியானா மாநிலத்தில், பஞ்சகுலா நகரத்தில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவரான கும்ரீத் ரஹிம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப் பதிவுசெய்ய ஹரியானா உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. 50 வயதுடைய கும்ரீத் தன்னுடைய பக்தர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. 

இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ராம் ரஹிம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சாமியார் ராம் ரஹிம்க்கான தண்டனை விவரங்கள் குறித்து வருகிற 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். வன்முறை சம்பவங்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 17 பேர் பலியாகி உள்ளனர். 

punjab


பஞ்சாப், ஹரியானாவைத் தொடர்ந்து டெல்லியிலும் வன்முறை வெடித்துள்ளது. பஞ்சாப், ஹரியானாவில் துணைராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நொய்டாவிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பஞ்சாப் ஹரியானா மக்களை வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement