Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பின் தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்'- பிரதமர் மோடி வலியுறுத்தல்

'இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 100 மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம், பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளிலும் தேசிய சராசரி அளவுக்கு இந்த மாவட்டங்களைக் கொண்டுவர முடியும்' என்று இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 

மோடி

மத்திய அரசின் 70-க்கும் மேற்பட்ட கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ''பொதுமக்களின் நலனுக்கும், அவர்களைத் திருப்திப்படுத்தவும் வளர்ச்சியுடன், சிறந்த ஆளுமையும் இணைந்து இருக்க வேண்டியது நமது பணியில் அவசியம். அதிகாரிகளுக்கு சிறந்த ஆளுமையே பிரதானமாக இருக்க வேண்டும். அரசின் அனைத்துத்  துறைகளும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாகவும் இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து அதிகாரிகளும், முடிவுகளை எடுக்கும்போது, ஏழைகள் மற்றும் சாதாரண குடிமக்களை தங்களது மனதில் நிலைநிறுத்தி செயல்பட வேண்டும். எளிமையான குடும்பத்தில் பிறந்த இளைஞர்கள், மிகவும் குறைவான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தங்கள் அயராத உழைப்பால், உயர்ந்த நிலையை அடைந்து வருகிறார்கள். அதுபோலவே குறைவான கட்டமைப்புகளில் பயிற்சி பெற்று விளையாட்டுப் போட்டிகளில் இன்றைய இளைஞர்கள் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். இத்தகையவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் நலனுக்காக சேவையாற்றுவதற்காக உங்களுக்கு தனிப்பட்ட அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தடைகளை உடைத்தெறிந்து, அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையேயான தகவல் தொடர்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம். முடிவுகளை எடுப்பதில் வேகமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும். நல்ல நோக்கத்துடன் நேர்மையான முறையில் எடுக்கப்படும் முடிவுகளை, மத்திய அரசு எப்போதுமே ஊக்குவிக்கும். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 100 மாவட்டங்களில் கவனம் செலுத்துங்கள். இதன்மூலம், பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளிலும் தேசிய சராசரி அளவுக்கு இந்த மாவட்டங்களைக் கொண்டுவர முடியும்' என்று பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement