சாமியார் குர்மீத் சிங்கை சிக்க வைத்த அந்தக் கடிதம்! | The letter which led to Gurmeet Ram Rahim Singh’s conviction

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (26/08/2017)

கடைசி தொடர்பு:16:20 (26/08/2017)

சாமியார் குர்மீத் சிங்கை சிக்க வைத்த அந்தக் கடிதம்!

ஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அசைக்க முடியாத செல்வாக்குடன் வலம் வந்தவர் சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங். இந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் சீக்கிய மக்களின் மனங்களைக் கூட புண்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடுவார். குருகோவிந்த் சிங்கை கூட கேலி செய்து கருத்துக் கூறியுள்ளார்.  

கும்ரீத் சிங் கைது

தேரா சச்சா அமைப்புக்கு உலகம் முழுக்க 5 கோடி தொண்டர்கள் உள்ளனர். பாட்டு பாடுவார், நடனம் ஆடுவார், சினிமாவில் நடிப்பார். தன்னை மனிதக்கடவுளாக கருதிக்கொண்டு 'மெசேஞ்சர் ஆஃப் காட்'  என்ற படத்தையும் எடுத்தார். முதலில் காங்கிரஸ் பக்கம் இருந்த குர்மீத் தற்போது, பாரதிய ஜனதா கட்சி பக்கம் சாய்ந்துள்ளார். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இவரை யாரும் பகைத்துக்கொள்ள முடியாது. தற்போது, 50 வயதான குர்மீத் சிங் பற்றி 'சாத்விக்கல்' என்று அழைக்கப்படும் பெண் சிஷ்யை ஒருவர் 2002-ம் ஆண்டு, பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதம்தான் இன்று அவரை சிறைச் செல்ல வைத்துள்ளது. 

அந்தக் கடிதத்தில், '' சிர்ஸாவில் உள்ள தேரா சச்சா அமைப்பின் தலைமயகத்தில் 40 முதல் 50 சாத்விக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறோம். தலைமையகத்தின் உள்ளே, குர்மீத்துக்கு வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு என்னை ஒரு முறை அழைத்து, பாலியல் பலாத்காரம் செய்தார். என்னை மிரட்டவும் செய்தார். என்னை பாலியல் பலாத்காரம் செய்த பின், 2 வருடங்கள் கழித்து எனக்கு தீட்சை அளித்தார். தொடர்ந்து,  பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்னைப் போல பலபெண்கள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கு தெரியவந்த பின்னரே, இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். பிரதமரும், நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். நான் என்னை அடையாளப்படுத்தினால் என் குடும்பத்தினருக்குத் தொல்லைத் தருவார்கள். இந்த மாநிலங்களில் அவரை எதிர்த்து யாரும் கேள்வி கூட கேட்க முடியாத நிலை இருக்கிறது''  எனக் கூறியிருந்தார்.

இதையடுத்தே, பஞ்சாப், ஹரியானா நீதிமன்றம் குர்மீத் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐக்கு உத்தரவிட்டது. 2008-ம் ஆண்டு குர்மீத் பாலியல் பலாத்காரம் செய்ததாக இரு சாத்விகள் ஒப்புக்கொண்டனர். 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் குற்றவாளி என அவர் அறிவிக்கப்பட்ட நிலையில்தான் வன்முறை வெடித்து, அநியாயமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close