வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்! - எச்சரிக்கும் மோடி!

’சட்டத்தை கையில் எடுத்துகொண்டு வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

modi
 

அகில இந்திய வானொலி  மூலம் மாதம் ஒரு முறை 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக  பிரதமர் நரேந்திர மோடி மக்களுடன் உரையாற்றுவார். ஒவ்வோர் மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஒலிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் அந்த மாதம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், பிரச்னைகள் குறித்து மோடி உரையாற்றுவார். அந்த வகையில் அண்மையில் நாட்டை உலுக்கிய கோரக்பூர் சம்பவம், பஞ்சாப்-ஹரியானா கலவரம் உள்ளிட்டவற்றை குறித்து மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்ற தொடங்கிய மோடி ’வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் தப்பிக்க முடியாது’ என்று பஞ்சாப்-ஹரியானா கலவரத்தைக் குறிப்பிட்டு பேசினார்.  மேலும் பேசிய மோடி ‘தனிநபர், குறிப்பிட்ட சமூகம் அல்லது அரசியல் கட்சி உள்ளிட்டவை மேலுள்ள விசுவாசத்தினால் வன்முறையில் ஈடுபடுதலை அரசு பொறுத்துக் கொள்ளாது. சட்டத்தை தன் கையில் எடுப்போர் தண்டிக்கப்படுவர்’ என்று எச்சரித்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!