Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஸ்டாலின் - டி.டி.வி. தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி' - சுப்பிரமணியன் சுவாமி ஆருடம்

மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இணைந்து இன்னும் சில நாள்களில் கூட்டணி ஆட்சியமைப்பார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரவித்துள்ளார். 

சுப்பிரமணியன் சுவாமி


அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. பிரிந்திருந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்தனர். இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு நீக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். டி.டி.வி. தினரனுக்கு தற்போது 23 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது.


ஏற்கெனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள அவர்கள், சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விடுவிக்கப்படுவதாக அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.


இந்நிலையில், பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டாலினும், தினகரனும் கூட்டணி சேர்ந்து, இன்னும் சில நாள்களில் ஆட்சியமைப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement