Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குர்மீத் ராம் ரஹீம் வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு: உச்சகட்ட பாதுகாப்பில் ஹரியானா, பஞ்சாப்!

குர்மீத் ராம் ரஹீம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

ராம் ரஹிம் சிங்

 


ஹரியானா மாநிலம் பஞ்சகுலா நகரத்தில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பு செயல்பட்டுவருகிறது. இதன் தலைவரான குர்மீத் ரஹீம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்கள் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டன. 50 வயதான கும்ரீத், தன்னுடைய பக்தர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. 


இந்நிலையில், இவ்வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து, குர்மீத்  ஆதரவாளர்கள் ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் வன்முறையில் ஈடுபட்டனர். அதேபோல, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்திலும்கூட கலவரம் ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பு


இதனால், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் தண்டனை விவரம்குறித்து இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. இதற்காக சிறைக்குச் செல்லும் நீதிபதி, சிறையில் வைத்தே தீர்ப்பு வழங்குகிறார். மதியம் 2.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.  கும்ரீத் மீது பாலியல் குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளதால், அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


இதையடுத்து, இன்று அசம்பாவிதம், வன்முறை ஏதும் நடக்காமல் இருப்பதற்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிகளில் இறக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement