62 நகரங்களில் நடைபெற்ற  விமானப்படைத் தேர்வு!

இந்திய விமானப்படை சார்பாக, ஆண்டுதோறும் நடத்தப்படும் AFCAT (Air Force Common Admission Test) எனப்படும் ஏர் ஃபோர்ஸ் காமன் அட்மிஷன் டெஸ்ட், நேற்று இந்தியா முழுவதும் 62 நகரங்களில் நடைபெற்றது. 

airforce

ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரு முறை இந்தத் தேர்வின்மூலம் இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை ஆயிரக்கணக்கான பொறியியல், கலை மற்றும் அறிவியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும், பட்டதாரிகளும் எழுதினார்கள். பொறியியல்துறை மாணவர்கள் கூடுதலாக EKT எனப்படும் ' இன்ஜினீயரிங் நாலெட்ஜ் டெஸ்ட்' எழுத வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றிபெறுபவர்கள், அடுத்த தேர்வுக்குத் தகுதிபெறுவர். அவ்வாறு தேர்ச்சி் பெறும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இந்திய விமானப் படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!