3 வருடம்... 30 கோடி வங்கிக் கணக்குகள்..! பிரதமர் மோடி பெருமை

பிரதமர் மோடி,"மூன்று வருடங்களில் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் 30 கோடி பேர் இணைந்துள்ளனர்"என்று அந்தத் திட்டத்தின் மூன்றாவது ஆண்டு விழாவில் பேசினார். 

modi


வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் தொடங்கப்பட்டதே ‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா’ என்னும் மாபெரும் திட்டம். இந்தத் திட்டத்தைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு, 2014 அன்று சுதந்திர தின உரையில் அறிவித்து, அதன்பின் 28 ஆகஸ்டு 2014 அன்று டில்லியில் தொடங்கி வைத்தார். 

இந்நிலையில் டெல்லியில் நேற்று இந்தத் திட்டத்தின் மூன்றாவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை கிட்டதட்ட 30 கோடி வங்கிக் கணக்குகள் இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படுள்ளன. இந்த எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம். இந்தத் திட்டத்தில் மட்டும் சுமார், 65,000 கோடி ருபாய் பணம் போட்டுள்ளனர். 

இந்தத் திட்டம் குறித்து ஓர்ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவில், அரசின் உயிர்க் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு திட்டங்கள், ரூபே டெபிட் கார்டு போன்ற வசதிகளை ஏழை எளிய மக்கள் பெற ஜன்தன் வங்கிக் கணக்கு உதவுவது ஆய்வில் தெரிய வந்தது. ஜன் தன் யோஜனா திட்டத்தால் ஏழை மக்கள் வங்கிகள் வந்து தங்களின் பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளனர்"என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!