Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய 75,000 கோடி ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை?

பழைய 1,000 ரூபாய் நோட்டுகளில் ஏறத்தாழ 99 சதவிகிதம் ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

ரூபாய்,

அதன்படி, பழைய 1,000 ரூபாய் நோட்டுகளில் 99 சதவிகித ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 1000 ரூபாய் நோட்டுகளில் 1.3 சதவிகித நோட்டுகள் அதாவது 8 ஆயிரத்து 925 கோடி ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கத்துக்கு முன் 17.50 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 88 சதவிகிதம் அதாவது 15.50 லட்சம் கோடி ரூபாய் வரை புழக்கத்தில் இருந்தன. இந்த நிலையில் இதுவரை 14 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் 75,000 கோடி ரூபாய் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் ரிசர்வ் வங்கி இது குறித்து முழு விவரத்தை வெளியிடவில்லை. இன்னும் ரூபாய் நோட்டினை எண்ணிக்கொண்டு இருப்பதாக மட்டும் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement