Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டோக்லா விவகாரத்தில் இந்தியா-சீனா புதிய ஒப்பந்தம்

டோக்லா விவகாரத்தில், ஒரே நேரத்தில் படைகளைப் பின்வாங்க இந்திய, சீன அரசுகள் சம்மதித்துள்ளன. இந்தியா, பூடான், சீனா எல்லையில் உள்ள டோக்லாவில், சீனப் படைகள் அமைத்த சாலையால் பிரச்னை ஏற்பட்டது. பூடானுக்கு ஆதரவாக இந்தியப் படைகள் டோக்லாவில் குவிக்கப்பட்டது. சீனாவும் பதிலுக்கு படைகளைக் குவித்துவந்தது.

இதனால், எல்லையில் பதற்றம் நிலவியது.  இந்தியப் படைகள் வாபஸ் பெற்றால் மட்டுமே, சீனப் படைகள் வாபஸ் பெறும் என சீனா உறுதியாகக் கூறிவந்தது. இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இரு நாட்டு அமைச்சர்களும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தனர். சீன மீடியாக்களும் இந்தியாவுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் வகையில் கருத்து வெளியிட்டுவந்தன.

சீனப்படைகள் வாபஸ்

இந்த நிலையில், இரு நாட்டுப் படைகளும் ஒரே நேரத்தில் டோக்லாவிலிருந்து வாபஸ் பெறுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''டோக்லா விவகாரத்தில் இரு தரப்புக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இரு தரப்பு கருத்துகளும் மதிப்புடன் பரிசீலிக்கப்பட்டன. வியூகங்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டதன் அடிப்படையில், இரு நாட்டுப்படைகளும் ஒரே நேரத்தில் டோக்லாவிலிருந்து வாபஸாகின்றன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, டோக்லாவிலிருந்து படைகள் வாபஸ் பெறப்படவில்லை. தொடர்ந்து ரோந்து பணியில் படையினர் ஈடுபட்டுவருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சீனாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுவதையொட்டி இந்தியா தனது படைகளை வாபஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது.

டோக்லா விவகாரத்தில், ஜப்பான் இந்தியாவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement