Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெடிகுண்டை தூக்கிக்கொண்டு ஓடிய காவலருக்கு 50,000 பரிசுத்தொகை..!

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடிய தலைமைக் காவலர் அபிஷேக் பட்டேலுக்கு சிவராஜ் சிங் சௌஹான் 50,000 ரூபாய் பரிசாக அளித்தார்.


மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் 400 மாணவர்கள் இருந்தபோது, மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்திருப்பது தெரிய வர,  அந்த வெடிகுண்டை மீட்ட போலீஸ்காரர் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் தொலைவு  அதனை சுமந்து சென்று பாதுகாப்பான பகுதியில் வைத்தார். தலைமைக் காவலர் அபிஷேக் பட்டேல் என்பவர்தான் இந்த அசாத்தியச் செயலைச் செய்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் எடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.

அபிஷேக் பட்டேலின் செயலுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அபிஷேக் பட்டேலுக்கு 50,000 ரூபாயை பரிசுத் தொகையாக அளித்தார். அதற்கான காசோலையை அவர், அபிஷேக் பட்டேலிடம் நேரில் வழங்கினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement