Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மஹாராஷ்ட்ராவில் துரந்தோ ரயில் தடம்புரண்டு விபத்து!

மஹாராஷ்ட்ராவில், துரந்தோ ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

துரந்தோ ரயில் விபத்து


மஹாராஷ்ட்ராவில் நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில், திட்வாலா பகுதி அருகே தடம்புரண்டது. இதில், ரயிலின் ஏழு பெட்டிகள் மற்றும் ரயிலின் இன்ஜின் தடம்புரண்டன. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் பயணிகளை மீட்டனர். இதில், சில பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வந்துள்ளது.


இதுகுறித்து மத்திய ரயில்வே, "பயணிகளைப் பத்திரமாக மீட்க, சம்பவ இடத்துக்குப் பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளன. மூத்த ரயில்வே அதிகாரிகள், விபத்து நடந்த இடத்தில் ஆய்வுசெய்துள்ளனர். இந்த விபத்தில், பயணிகளுக்குக் காயம் ஏற்படவில்லை" என்று கூறியுள்ளது.


இதனிடையே, ரயில் விபத்தால் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டுவருகின்றன.  கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில், முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டத்தில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


 அதே உத்தரப்பிரதேசத்தில், கான்பூர் அருகே, ஹைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திலும் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது அடுத்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement