Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெக்சாஸை சுருட்டிய சூறாவளி : இந்திய மாணவர்கள் இருவர் கவலைக்கிடம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைப் புரட்டிப் போட்ட ஹார்வி சூறாவளியில் சிக்கிய இந்திய மாணவர்கள் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

texas
 

டெக்சாஸ் மாகாணத்தை மையம் கொண்டு கடந்த வாரம் வீசிய ஹார்வி சூறாவளியைத் தொடர்ந்து, அங்கு கனமழை பெய்தது. இதனால் ஹோஸ்டன் நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.  ஹார்வி புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று டெக்சாஸ் செல்கிறார். இதுவரை மழை வெள்ளம் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவம் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், அங்கு பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது

இதனிடையே டெக்சாஸ் A&M பல்கலைக்கழகத்தில் படித்துவரும் இரண்டு இந்திய மாணவர்கள் ஷாலினி மற்றும் நிகில் அங்குள்ள பிரையன் ஏரியின் வெள்ளத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஹோஸ்டனில் உள்ள இந்தியாவின் தூதரகக் கிளை தெரிவித்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement