Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சர்களுக்கு நோ.. தினகரன் ஆதரவாளர்களுக்கு யெஸ்...தேர்தல் ஆணையம் அதிரடி!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவதற்காக அ.தி.மு.க அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். இந்நிலையில், தினகரன் அணி தரப்பில் புகழேந்தி மற்றும் முன்னாள் எம்.பி அன்பழகன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். ஆனால், அ.தி.மு.க அமைச்சர்களைச் சந்திக்க தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

புகழேந்தி


இதையடுத்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சி.வி சண்முகம் மற்றும் மைத்ரேயன் எம்.பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துள்ளனர். மேலும், இரட்டை இலைச் சின்னம் முடக்கம் தொடர்பான வழக்கை திரும்பப் பெறுவது குறித்து அமைச்சர்களுடன் மைத்ரேயன் எம்.பி. ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது.


இந்நிலையில் டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதியுடன் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சந்தித்துள்ளார். அப்போது, இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில், சின்னம் தொடர்பாக தங்களது கருத்தை கேட்காமல், எந்த முடிவும் அறிவிக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement