வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (29/08/2017)

கடைசி தொடர்பு:17:21 (29/08/2017)

தங்கமகன் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி! #ArjunaAward

சேலம் மாவட்டம், வடுகப்பட்டியைச் சேர்ந்த ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

விருது வாங்கும் மாரியப்பன்

தங்கவேலு மாரியப்பனுக்கு ஏற்கெனவே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற  விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவருக்கு அர்ஜுனா விருது வழங்கினார். மாரியப்பனைத் தவிர தமிழக வீரர்கள் ஆரோக்ய ராஜீவ் மற்றும் அமல்ராஜ் ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் செத்தேஷ்வர் புஜாரா, இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கௌர் உள்ளிட்ட 17 பேர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.