Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் கோரக்பூர் சோகம் - மேலும் 7 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டால் மேலும் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 


கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாடு மற்றும் மூளை வீக்கம் காரணமாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்று புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் குற்றம்  சாட்டப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவியும், மருத்துவருமான பூர்ணிமா சுக்லா ஆகியோரை சிறப்புப் படை போலீஸார் கான்பூரில் இன்று கைது செய்தனர். இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 6 ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் மீது ஹஸ்ரத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோரக்பூர் மருத்துவமனையில் மூளைவீக்கம் காரணமாக கடந்த 2 நாள்களில் மட்டும் மேலும் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement