Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்த அதிர்ச்சி: கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 42 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், கடந்த இரண்டு நாள்களில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கோரக்பூர்


உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி அரசு மருத்துவமனையில், 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், மூளை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணைக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 


குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவியும், மருத்துவருமான பூர்ணிமா சுக்லா ஆகியோர் நேற்று கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில் கோரக்பூர் பி.ஆர்.டி அரசு மருத்துவமனையில் 42 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அடுத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பி.கே.சிங்

இதுகுறித்து, பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.கே. சிங் கூறுகையில், 'கடந்த இரண்டு நாள்களில் 42 குழந்தைகள் உயிரிழந்தன. இவற்றில் ஏழு குழந்தைகள் மூளை வீக்கம் காரணமாகவும், மற்ற குழந்தைகள் பிற காரணங்களாலும் உயிரிழந்துள்ளன' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement