Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குஜராத்தை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல் - 24 மணி நேரத்தில் 5 பேர் பலி!

குஜராத்தில், பன்றிக் காய்ச்சல் (Swine flu) அதிவேகமாகப் பரவிவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

swine flu
 

குஜராத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பன்றிக் காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த  மூன்று நாள்களில் மட்டும் 20 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு, ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை 343 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலைத் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,447 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 152 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீப காலமாக, வடமாநிலங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 30 நாள்களில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. கோரக்பூரில் மூளைக் காய்ச்சல் நோயால் கடந்த 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவை, மத்தியில் ஆளும் பா.ஜ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சுகாதார அமைச்சகம் துடிப்புடன் செயல்படும் சூழல் உருவாகியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement