தனி நாணயத்துடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்த சாமியார் குர்மீத்! 

குர்மீத்

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு குர்மீத் ராம் ரஹிம் சிங் குற்றவாளி எனத் தீர்ப்பு வெளியாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குர்மீத்,ஹரியானா மாநிலம் சிர்சா எனும் பகுதியில் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் `தேரா சச்சா சவுதா' ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில் தேரா சச்சா சவுதா பகுதியிலுள்ள கடைகளில் 5 ரூபாய், 10 ரூபாய் எனத் தனியாக நாணயங்கள் புழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நாணயங்களில் `தண் தண் சத்குரு தெரா ஹீ அசரா' மற்றும் `தேரா சச்சா சவுதா சிர்ஸா' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நாணயங்கள் ஆசிரமத்துக்கு அருகில் உள்ள கடைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முற்றும் துறந்த துறவிகளைப்போல இல்லாமல் சொந்தமாக நாணயத்துடன் வாழ்ந்த மாடர்ன் சாமியார் குர்மீத் ராம் ரஹிமுக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!