Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'30 ரூபாய் வருவாய்க்காக 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்!' - கிரண்பேடி வேதனை

”மது விற்பனை மூலம் மாநில வருவாயைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். அதேசமயம் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக அதைவிட அதிகமாக செலவு செய்துகொண்டிருக்கிறோம்” என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.

கிரண்பேடி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் போதை மறுவாழ்வு பிரிவு மற்றும் போதைத் தடுப்புக்கான சேவைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திறந்து வைத்தார். அப்போது புதுவை அரசின் மிக முக்கியமான வருவாயாக மது விற்பனைதான் இருக்கிறது. ஆனால், ஒரு வகையில் அது பாவப்பட்ட பணம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அங்கு சென்ற கிரண்பேடி அந்தப் பிரிவின் செயல்பாடுகளை ஆய்வுசெய்தார். அப்போது, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்தில், “மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களிடம் பேசினேன். அப்போது தினமும் மதுவுக்காக 70 ரூபாய் அவர்கள் செலவு செய்வதை தெரிவித்தார்கள். ஆனால், அவர்களின் மருத்துவ செலவுக்காக தினமும் ஜிப்மர் 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறது. மதுவின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும் வருமானம் 30 ரூபாய். ஆனால், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மத்திய அரசு செய்யும் செலவு 5 ஆயிரமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதன்பின் பராமரிப்பு மற்றும் மருந்து செலவுகளும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஒருபக்கம் மது விற்பனை மூலம் மாநில வருவாயைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். மறுபக்கம் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக அதைவிட அதிகமாக செலவுசெய்து கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களில் மதுப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement