Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லோக்பால் சட்ட தாமதத்துக்கு என்ன காரணம்? : கேள்வி எழுப்பும் அன்னா ஹசாரே!

'லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அன்னா ஹசாரே.

அன்னா ஹசாரே

ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே உள்ளிட்டவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2013-ல் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். அதன்படி லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டு அதில் இடம்பெறுபவர்களைத் தேர்வு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தேர்வு கமிட்டியில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு சட்ட நிபுணர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெற வேண்டும்.

லோக்சபா எம்.பி-க்கள் 545 பேரில் பத்து சதவிகித எண்ணிக்கையைக் கொண்ட கட்சிதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்க முடியும். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 45 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லாத சூழல் உள்ளது. இதனால்தான் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. கடந்த மார்ச் மாதமே உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு, 'தாமதிக்காமல் லோக்பால் அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக தற்போது அன்னா ஹசாரே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ’தாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இதுவரையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. இதுகுறித்து நான் இதற்கு முன்னர் எழுதிய கடிதத்துக்கும் பதில் வரவில்லை என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுகூற விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement